இசைப்புயல் உடன் இணைந்த வைகைப்புயல்... மாமன்னன் படத்திற்காக வடிவேலுவும், ஏ.ஆர்.ரகுமானும் செய்த தரமான சம்பவம்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாமன்னன் திரைப்படத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் இசையில் வடிவேலு பாடல் பாடி உள்ளார்.
பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை இயக்கியவர் மாரி செல்வராஜ். இவர் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகி உள்ள திரைப்படம் தான் மாமன்னன். இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள இப்படத்தில் பஹத் பாசில், வடிவேலு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மாமன்னன் படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தான் தயாரித்து உள்ளது.
உதயநிதி ஸ்டாலின் அரசியலில் பிசியாகிவிட்டதால் இனி படங்களில் நடிக்கப்போவதில்லை என அறிவித்துவிட்டார். மாமன்னன் திரைப்படம் தான் அவர் நடிப்பில் ரிலீஸ் ஆக உள்ள கடைசி திரைப்படம் என்பதால் இப்படத்தை பிரம்மாண்டமாக வெளியிட திட்டமிட்டு உள்ளனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் அண்மையில் வெளியிடப்பட்டு வரவேற்பை பெற்றது. மாமன்னன் படத்தை வருகிற ஜூன் மாதம் ரிலீஸ் செய்ய உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.
இதையும் படியுங்கள்... நிற்ககூட முடியல... ரோபோ சங்கரின் இந்த நிலைமைக்கு காரணம் என்ன? பயில்வான் சொன்ன ஷாக் தகவல்
இந்நிலையில், மாமன்னன் படம் குறித்த மற்றுமொரு மாஸ் அப்டேட்டை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டுள்ளார். மாமன்னன் படத்தின் பாடல் பதிவு பணிகளில் பிசியாக இருக்கும் அவர், இப்படத்திற்காக வைகைப்புயல் வடிவேலு பாடல் ஒன்றை பாடி உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அந்த பாடல் பதிவின் போது வடிவேலு, மாரி செல்வராஜ், யுகபாரதி ஆகியோர் உடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார்.
இதுகுறித்து ஏ.ஆர்.ரகுமான் பதிவிட்டுள்ளதாவது : “வைகைப்புயல் வடிவேலு உடன் பாடல் ஒன்றை பதிவு செய்தோம். அப்போது எங்கள அனைவரையும் அவர் சிரிக்க வைத்து, இந்த தருணத்தை மறக்க முடியாத ஒன்றாக மாற்றிவிட்டார்” என பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் இந்த காம்போவுக்காக தான் பல ஆண்டுகள் காத்திருந்ததாக கமெண்ட் செய்து வருகின்றனர். இந்தப் பாடல் விரைவில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... பயங்கர விபத்து... டிவைடரில் மோதிய கார் - சூப்பர் சிங்கர் ரக்ஷிதாவுக்கு என்னாச்சு? பதறிப்போன ரசிகர்கள்