விஜய் போட்டோவை ஏன் என்கிட்ட கொண்டுவந்த... மகனுக்காக வாய்ப்பு கேட்ட எஸ்.ஏ.சி; ரிஜெக்ட் பண்ணி அனுப்பிய பாரதிராஜா
‘கருமேகங்கள் கலைகின்றன’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர், நடிகர் விஜய்யின் ஆரம்ப காலகட்டத்தில் பாரதிராஜா போன்ற பல்வேறு முன்னணி இயக்குனர்கள் அவரை நடிக்க வைக்க மறுத்ததாக தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் விஜய். இவரை இவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் சினிமாவில் அறிமுகப்படுத்தி இருந்தாலும், தனது விடா முயற்சியால் முன்னேறி தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார். நடிகர் விஜய்யின் ஆரம்ப காலகட்டத்தில் அவரை பாரதிராஜா உள்பட பல்வேறு முன்னணி இயக்குனர்கள் தங்களது படங்களில் நடிக்க வைக்க மறுத்ததாக எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘கருமேகங்கள் கலைகின்றன’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது தனது சினிமா அனுபவங்களை பகிர்ந்துகொண்ட அவர், தனது மகன் விஜய் குறித்து சில ஷாக்கிங் தகவல்களை வெளியிட்டார்.
இதையும் படியுங்கள்... இசைப்புயல் உடன் இணைந்த வைகைப்புயல்... மாமன்னன் படத்திற்காக வடிவேலுவும், ஏ.ஆர்.ரகுமானும் செய்த தரமான சம்பவம்
அதில் அவர் பேசியதாவது : “சினிமாவில் நிறைய படங்களை இயக்கியதன்மூலம் நிறைய பணம் சம்பாதிக்க முடிந்த என்னால் தங்கர் பச்சான் போல் நல்ல இயக்குனர் என்கிற பெயரை சம்பாதிக்க முடியவில்லை. விஜய்யின் ஆரம்ப காலகட்டத்தில் அவரை ஹீரோவாக்க முயன்றபோது, பாரதிராஜாவிடம் விஜய்யின் புகைப்படங்களை காண்பித்தேன். அவர் ஏங்கிட்ட ஏன் இதையெல்லாம் கொண்டுவந்த என கேட்டுவிட்டார்.
பாரதிராஜா மட்டுமின்றி பல்வேறு முன்னணி இயக்குனர்கள் விஜய்யை நடிக்க வைக்க மறுத்துவிட்டனர். அவர்கள் நடிக்க வைக்க மறுத்ததும் ஒரு விதத்தில் நல்லதாபோச்சு. என்னிடம் வந்ததால் தான் விஜய் தற்போது கமர்ஷியல் ஹீரோவாக மாறி இருக்கிறார்” என எஸ்.ஏ.சந்திரசேகர் அந்த விழாவில் பேசி இருந்தார். ஏற்கனவே விஜய்க்கும், அவரது தந்தைக்கு எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் இடையே பிரச்சனை இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், அவர் பட விழாவில் விஜய்யை பற்றி தற்போது பேசி உள்ளது கவனம் பெற்றுள்ளது.
இதையும் படியுங்கள்... நிற்ககூட முடியல... ரோபோ சங்கரின் இந்த நிலைமைக்கு காரணம் என்ன? பயில்வான் சொன்ன ஷாக் தகவல்