ஜெயலலிதாவுக்கும் நம்பியாருக்கும் இருந்த நட்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவின் இரும்பு பெண்மணி என்று அழைப்படுபவர் ஜெயலலிதா. தமிழக அரசியல் மட்டுமின்றி இந்திய அரசியலில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் ஜெயலலிதா. தனக்கு நெருக்கமானவர்களை அன்போடும், கனிவோடும் உபசரிக்கும் குணம் கொண்ட அவர், தனது எதிரிகளை காலில் விழ செய்யவும் தயங்கமாட்டார். ஒற்றை பெண்மணியானக அதிமுக என்ற மிகப்பெரிய கட்சியை ராணுவ கட்டுப்பாட்டுடன் நடத்தி வந்தார்.

ஆனால் அவர் மிகவும் கனிவுள்ளம் கொண்டவர் என்பது அவருக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே தெரியும். ஜெயலலிதா சினிமாவில் நடித்து கொண்டிருந்த போது நம்பியாரும் வில்லனாக கலக்கி கொண்டிருந்தார். குறிப்பாக பெரும்பாலான எம்.ஜி.ஆர் படங்களுக்கு நம்பியார் தான் வில்லனாக இருப்பார். ஜெயலலிதாவுக்கும் நம்பியாருக்கும் இருந்த நட்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

சிவா படம் முடியட்டும்.. அடுத்த ப்ராஜெக்ட்டில் மாஸ் ஹீரோவோடு கைகோர்க்கும் முருகதாஸ் - தரமான சம்பவம் லோடிங்!

சினிமாவில் உச்சத்தில் இருந்த ஜெயலலிதாவுக்கு திடீரெனநம்பியார் வீட்டில் இருந்து அழைப்பு வந்துள்ளது. உடனடியாக அங்கு சென்ற ஜெயலலிதாவுக்கு பிடித்தமான உணவுகளை நம்பியாரும் அவரின் மனைவியும் தயார் செய்து வைத்திருந்தார்களாம்.

 மேலும் ஜெயலலிதாவுக்கு வெள்ளித்தட்டில் உணவு பரிமாறப்பட்டதாம். நம்பியார் தனக்கு வழங்கிய விருந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைந்தாராம். ஆனால் பல ஆண்டுகளுக்கு பின்னர் ஜெயலலிதா முதலமைச்சரானதும் நம்பியாரையும் அவரின் மனைவியை தனது வீட்டிற்கு அழைத்து அதே போல் தடபுடலாக மதிய விருந்து கொடுத்தாராம். நம்பியாருக்கு வெள்ளித்தட்டில் தான் ஜெயலலிதா பரிமாறினாராம்.

என்னை நீங்கள் எப்படி கௌரவப்படுத்தி விருந்து கொடுத்தீர்களோ அதே போல் உங்களையும் கௌரவிக்க வேண்டும் என்று கருதி ஜெயலலிதா இதனை செய்தாராம்.. ஆனால் இந்த இரண்டு சம்பவங்களுக்கும் இடையே பல ஆண்டுகள் இடைவெளி இருந்ததாம்.

பிளாஷ்பாக் : பெரியாரை அப்போ பிடிக்காது.. என் மனம் கவர்ந்த தலைவர் "அவர்" தான் - ஓப்பனாக பேசிய நடிகவேள் M.R ராதா

இதனால் மகிழ்ச்சியடைந்த நம்பியார் தனது திரையுலக சகாக்களிடம் ஜெயலலிதாவை பாராட்டி உள்ளார். அதாவது “ அம்மு எதையுமே மறப்பதில்லை.. எல்லாத்தையும் அப்படியே ஞாபகம் வச்சிருக்கு” என்று கூறி நெகிழ்ச்சி அடைந்தாராம். அதன்பின்னரே ஜெயலலிதாவை அம்மு என்று நம்பியார் அழைக்கும் விஷயம் பலருக்கும் தெரியவந்ததாம். ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவர்கள் அவரை அம்மு என்றே அழைப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.