OTTக்கு கட்டாயம் தணிக்கை வேண்டும் - பேச்சுவார்த்தைக்கு தயாராகும் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்!
நேரடியாக திரையரங்குகளுக்கு வராமல் இந்த OTT-யில் வெளியாகும் திரைப்படங்களுக்கு தணிக்கை என்பது இதுவரை கிடையாது.

கடந்த சில வருடங்களாக, அதிலும் குறிப்பாக பெருந்தொற்று உலகை ஆட்கொண்ட நாளிலிருந்து பாதிக்கப்பட்ட துறைகளில் சினிமா துறையும் ஒன்று. தற்பொழுது அந்த பாதிப்பிலிருந்து மீண்டு வந்து கொண்டிருக்கும் சினிமா துறையில் அண்மையில் பிரபலமாக உள்ள ஒரு விஷயம் தான் இணைய வழியில் திரைப்படங்களை வெளியிடும் OTT தளங்கள்.
ஆரம்ப காலகட்டத்தில் சிறு பட்ஜெட் திரைப்படங்களை மட்டும் பெரிய அளவில் வெளியிட்டு வந்த இந்த OTT நிறுவனங்கள், தற்பொழுது பெரிய பட்ஜெட் கொண்ட திரைப்படங்களையும் வெளியிட்டு வருகிறது. மேலும் திரையரங்குகளில் சில வாரம் ஓடி முடித்த பிறகு அந்த திரைப்படங்கள் தற்பொழுது OTTயில் வெளியாகி வருவதையும் நம்மால் பார்க்கமுடிகிறது.
ஆனால் நேரடியாக திரையரங்குகளுக்கு வராமல் இந்த OTT-யில் வெளியாகும் திரைப்படங்களுக்கு தணிக்கை என்பது இதுவரை கிடையாது. இதனால் ஆபாச வசனங்கள், ஆபாச காட்சிகள், வன்முறையை தூண்டும் வகையில் அமையும் காட்சிகள் என்று பல வகையான, தணிக்கை செய்யப்படவேண்டிய காட்சிகள், தணிக்கை செய்யப்படாமலேயே OTTயில் வெளியாகிறது.
சமந்தா - விஜய் தேவரகொண்டா நடித்துள்ள 'குஷி' படப்பிடிப்பு நிறைவடைந்தது!
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எளிதில் பார்க்கக் கூடிய ஒரு இடத்தில் OTTகள் இருந்தும் இதற்கு தணிக்கை குழு இல்லாமல் இருப்பது பெரும் குறையாகவே இருந்து வருகிறது என்று மக்கள் கருதுகின்றனர். இந்நிலையில் இந்தியாவின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், OTT சம்மந்தமான அதிகாரிகளுடன் வருகிற ஜூன் 20ம் தேதி இது குறித்த ஒரு கலந்தாய்வில் ஈடுபட உள்ளதாகவும்.
OTT தளங்களுக்கும் கட்டாயம் தணிக்கை குழு அமைக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.