"ஒரே நாளில் ரெண்டு".. நிற்க நேரமில்லாமல் ஓடும் யோகி பாபு - வெளியான சாம்பார் சட்னி மற்றும் Boat பட அப்டேட்!
சிம்புதேவன் இயக்கும் அடுத்த திரைப்படத்தில் கதையின் நாயகனாக களமிறங்குகிறார் யோகி பாபு.

ஒரு காலத்தில் கோடம்பாக்கத்தை சுற்றி சுற்றி வந்து தனக்கான வாய்ப்பை நித்தமும் தேடி வந்த ஒருவர் தான் இன்று தமிழ் சினிமாவின் மிகசிறந்த நகைச்சுவை நடிகராக திகழ்ந்து வருகின்றார். சின்னத்திரை நிகழ்ச்சிகளில் ஆங்காங்கே சில Frameகளில் வந்து சென்ற அவர் இன்று முன்னணி காமெடி நாயகனாக மாறியுள்ளார் என்றால் அதற்கு அவர் உழைப்பு மட்டுமே காரணம்.
யோகி பாபு, தொடக்க காலங்களில் வெள்ளித்திரையில் சிறு சிறு நகைச்சுவை கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து வந்த அவர், அதன் பிறகு தளபதி விஜய் முதல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வரை பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்க துவங்கினர்.
அதேபோல அவ்வப்போது சில படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார் யோகி பாபு. இந்நிலையில் இன்று ஒரே நாளில் அவருடைய இரண்டு திரைப்படங்கள் குறித்த தகவல்கள் தற்பொழுது வெளியாகி உள்ளது. டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் நிறுவனம் வெளியிடும் "சாம்பார் சட்னி" என்ற திரைப்படத்தில் யோகி பாபு நடிக்க உள்ளார்.
சமந்தா - விஜய் தேவரகொண்டா நடித்துள்ள 'குஷி' படப்பிடிப்பு நிறைவடைந்தது!
இந்த திரைப்படத்தில் நடிகை வாணி போஜன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். பிரபல இயக்குனர் ராதா மோகன் இந்த திரைப்படத்தை இயக்க, பிரபல வேல்ஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்து வழங்க உள்ளது.
அதேபோல பல வெற்றி திரைப்படங்களை கொடுத்த சிம்புதேவன் இயக்கும் அடுத்த திரைப்படத்தில் கதையின் நாயகனாக களமிறங்குகிறார் யோகி பாபு. தற்போது இந்த திரைப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்திற்கு BOAT என்று பெயரிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
OTTக்கு கட்டாயம் தணிக்கை வேண்டும் - பேச்சுவார்த்தைக்கு தயாராகும் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்!