மீடூ விவகாரம் குறித்து மூத்த நடிகைகள், மற்றும் பிரபலங்கள் தங்கள் மனதில் பட்ட கருத்துக்களை வெளிப்படத்தியாக கூறி வருகிறார்கள். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த் கூறியுள்ள பதில் யாரும் எதிர்பாரதாக உள்ளது என பலர் கூறி வருகிறார்கள். 

நடிகர் ரஜினிகாந்த்தின் மனைவி லதா, ஸ்ரீதயா அறக்கட்டளை சார்பில், குழந்தைகளுக்கான அமைதி நிகழ்ச்சி நடத்த உள்ளார். இதுப்பற்றி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். 

அப்போது பேசிய இவர்... சென்னை, திருவான்மியூரில் நவம்பர் 2 முதல் 4-ம் தேதி வரை இந்த நிகழ்ச்சி நடக்கிறது. குழந்தைகளுக்கான பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கலை மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளதாகவும் இதில் மொத்தம் 1500 குழந்தைகள் பங்கேற்க உள்ளதாகவும் கூறினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் பங்கேற்க உள்ளதாக தெரிவித்தார்.

அனைத்து குக்கிராமங்களிலும் தயா அறக்கட்டளை சார்பாக குழந்தைகளுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குழந்தைகளை வைத்து பிழைக்கும் அளவுக்கு இந்த சமூகம் தரம் தாழ்ந்துவிட்டது. குழந்தை கடத்தலை தடுக்க ஒவ்வொரு ஊரிலும் முகாம்கள் அமைக்கப்படும் என்று தெரிவித்தார். 

அப்போது இவரிடம் தமிழ் திரையுலகில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் மீ டூ விவகாரம் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அவர்... மீடூ தனிப்பட்டவர்களின் வாழ்க்கையில் நடந்த விஷயம். இதில் நான் தலையிட கூடாது என யாரும் எதிர்பாராத பதிலை கொடுத்தார். அதே போல் எந்த துறையிலும் கெடுதல் நடக்க கூடாது என விரும்புகிறேன் என்று கூறி அங்கிருந்து சென்றார்