அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட்டான மெர்சல் திரைப்படம் திரையரங்குகளில் மீண்டும் ரீ-ரிலீஸ் ஆக உள்ளது.

Mersal Re-release : சமீபகாலமாக ரீ-ரிலீஸ் ஆகும் படங்கள் பெரும் வெற்றி பெற்று வருகின்றன. தமிழகத்தில் கடந்த ஆண்டு கில்லி பட ரீ-ரிலீஸ் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த நடிகர் விஜய், இந்த ஆண்டு சச்சின் படத்தை ரீ-ரிலீஸ் செய்து அதிலும் வெற்றி கண்டார். இந்த நிலையில், நடிகர் விஜய்யின் மற்றொரு படமும் ரீ-ரிலீசுக்கு தயாராகி வருகிறது. விஜய் நடித்த மெர்சல் திரைப்படம் தான் மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளதாம்.

விஜய்யின் மெர்சல்

2017 ஆம் ஆண்டில் அட்லீ இயக்கத்தில் வெளிவந்த படம் மெர்சல். விஜய் மூன்று வேடங்களில் நடித்திருந்தார். வெற்றிமாறன், வெற்றி, டாக்டர் மாறன் ஆகிய கதாபாத்திரங்களில் விஜய் நடித்திருந்தார். எஸ்.ஜே. சூர்யா, சத்யராஜ், வடிவேலு, ஹரீஷ் பேரடி, காஜல் அகர்வால், நித்யா மேனன், சமந்தா, கோவை சரளா, சத்யன், ராஜேந்திரன், காளி வெங்கட், தேவதர்ஷினி, சுரேகா வாணி, மிஷா கோஷல், சிவகுமார், பாண்டியன், தவசி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

ரீ-ரிலீஸ் ஆகும் மெர்சல்

120 கோடி பட்ஜெட்டில் தயாரான இந்தப் படம் உலகளவில் 260 கோடி ரூபாய் வசூல் செய்தது. நடிகர் விஜய்யின் பிறந்தநாள் வருகிற ஜூன் 22ந் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், அதை முன்னிட்டு மெர்சல் திரைப்படம் வருகிற ஜூன் 20 ஆம் தேதி கேரளாவில் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது. கேரளாவில் நடிகர் விஜய்க்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அதேபோல் கர்நாடகாவிலும் மெர்சல் ரீ-ரிலீஸ் ஆக உள்ளது. அங்கு இப்படம் ஜூன் 13ந் தேதி ரீ-ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

விஜய் நடிக்கும் அடுத்த படம் ஜனநாயகன். எச். வினோத் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். பாபி தியோல், பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், நரேன், பிரியாமணி, மமிதா போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். கலை நயமிக்க, தரமான படங்களைத் தயாரிக்கும் வெங்கட் கே நாராயணன், கேவிஎன் புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜனநாயகன் படத்தைத் தயாரிக்கிறார். ஜனநாயகன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. விஜய் நடிக்கும் காட்சிகள் முழுவதுமாக படமாக்கி முடிக்கப்பட்டுவிட்டன. எஞ்சியுள்ள சில காட்சிகளை தற்போது படமாக்கி வருகிறார்கள். இதுதான் நடிகர் விஜய்யின் கடைசி படம் என்பது குறிப்பிடத்தக்கது.