Mereal has made a record in Tamil Nadu without any Tamils What is the achievement?
கேரளாவில் இதுவரை எந்த தமிழ் படமும் வசூல் செய்யாத அளவுக்கு வசூல் செய்து மெர்சல் படம் சாதனை படைத்துள்ளது.
அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த மெர்சல் திரைப்படம் பல்வேறு தடைகளை தாண்டி தீபாவளிக்கு பிரமாண்டமாக வெளியானது.
எதிர்கொண்ட தடைகளை எல்லாம் தவிடுபொடி ஆக்கி வெளியானது ஒரு விளம்பரம் என்றால் அரசியல் கட்சிகளும் இப்படத்துக்கு விலையில்லா விளம்பரம் அளித்தன.
அதனால் இப்படத்திற்கு பிரமாண்ட வரவேற்பு கிடைத்து பெரும்பாலான ஜெனரல் ஆடியன்ஸ்க்கு படம் பிடித்துப் போனது. மேலும், வசூலிலும் சாதனைப் படைத்தது.
மெர்சல் படம் ரூ.200 கோடி வசூலை குவித்ததாக அப்படக்குழுவினருக்கு விஜய் பார்ட்டி வைத்தார்.
இந்த நிலையில் கேரளாவில் மட்டும் இந்தப்படம் எந்த தமிழ் படமும் செய்யாத சாதனையை செய்துள்ளது.
மெர்சல் படம் தற்போது வரை கேரளாவில் ரூ.20 கோடி வசூல் செய்துள்ளதாம். இதுவரை எந்தவொரு தமிழ் படமும் கேரளாவில் இந்த அளவுக்கு வசூல் செய்யவில்லையாம்.
இதுதான் முதல் தமிழ் படம் என்ற பெருமையை பெற்று இந்த இடம், அந்த இடம், இந்த ஏரியா அந்த ஏரியா ஆல் ஏரியாவுல ஐயா கில்லி டா! என்று நிரூபித்துள்ளார் தளபதி விஜய்.
