meral tamil songs creat new record
சர்ச்சைகளுக்கு பஞ்சமே இல்லாமல் தீபாவளியன்று வெளியாகி, விஜய் ரசிகர்களை மெர்சலாகிய திரைப்படம் 'மெர்சல்'.
இந்த படம் வெளியாகும் முன்புதான் பல பிரச்சனைகளை சந்தித்தது என்றால், வெளிவந்த பிறகும் பாஜக கட்சி மற்றும் மருத்துவ சங்கத்தினர் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற ஒரு சில வசனங்களுக்காக எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இந்த படத்தின் தணிக்கை சான்றிதழையும் ரத்து செய்யவேண்டும் என்றும் வழக்கு தொடரப்பட்டது.

தற்போது ஒரு வழியாக அனைத்து பிரச்சனையும் முறியடித்து நாளுக்குநாள் தன் சாதனைகளைப் பட்டியல் போட ஆர்பித்துள்ளது மெர்சல்.
ஏற்கனவே, திரையரங்கத்தில் வசூலில் கெத்து காட்டிவரும் மெர்சல், தற்போது சமூக வலைத்தளத்திலும் சாதனை படைத்துள்ளது.

மெர்சல் படத்தின் தமிழ் பாடல்கள் இது வரை 100 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது என்று சோனி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இந்த தகவலை விஜய் ரசிகர்கள் உற்சாகமாக இணையதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
