இன்று எந்த அப்டேட்டும் இல்லை.. விஜய் ஆண்டனியின் சோகத்தில் பங்கேற்ற தளபதி விஜயின் லியோ - வெளியான அறிவிப்பு!
பிரபல நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி அவர்களின் மூத்த மகள் மீரா இறந்த சம்பவம், ஒட்டுமொத்த தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது என்று தான் கூறவேண்டும். பல்வேறு பிரபலங்கள் விஜய் ஆண்டனிக்கு ஆறுதல் கூறிவரும் நிலையில், அவருடைய சோகத்தில் லியோ திரைப்பட குழுவும் பங்கேற்றுள்ளது.

தளபதி விஜய் நடிப்பில் அடுத்த மாதம் வெளியாக உள்ள லியோ திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், கடந்த இரண்டு நாட்களாக இந்த திரைப்படத்தின் இரு போஸ்டர்கள் வெளியாகி தளபதி விஜயின் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இன்றும் இந்த படம் குறித்த ஒரு புதிய போஸ்டர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் பிரபல நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி அவர்களுடைய மகள் மீரா விஜய் ஆண்டனி, 17 வயதில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது,
பெற்றோர்களை மட்டுமல்ல.. தான் பயின்ற பள்ளியையே பெருமைப்படுத்திய மீரா விஜய் ஆண்டனி - வைரலாகும் வீடியோ!
இதனால் திரையுலகம் மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த தமிழகமே சோகத்தில் ஆழ்ந்து உள்ளது என்று தான் கூற வேண்டும். இந்நிலையில் இன்று லியோ திரைப்படம் குறித்த போஸ்டரை வெளியிடுவது ஏற்புடையதாக இருக்காது என்பதனால், இன்று வெளியிட வேண்டிய போஸ்டரை நாளை வெளியிட உள்ளதாக லியோ திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
பிரபல இசையமைப்பாளர் மற்றும் நடிகர் விஜய் ஆண்டனி அவர்களின் மகள் மீரா விஜய் ஆண்டனி, இன்று அதிகாலை 3 மணி அளவில் தனது இல்லத்தில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.