பிக் பாஸ் சீசன் 3  நிகழ்ச்சியில் மிகவும் சர்ச்சைக்குரிய போட்டியாளர்களில் ஒருவராக சூப்பர் மாடல் மீரா மிதூன் நன்கு அறியப்பட்டவர்.  தானா சேர்ந்த கூட்டம் மற்றும் 8 தோட்டாக்கல் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ரஜினிகாந்த், விஜய், த்ரிஷா, ஐஸ்வர்யா ராஜேஷ், மாளவிகா மோகனன் போன்ற பிரபலங்களை சமூக வலைதளங்களில் வம்பிற்கிழுப்பதும், தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதுமாக சர்ச்சையில் பிஸியாக இருந்து வருகிறார் மீராமிதுன்.  இப்போது அவர் பாஜகவில் பயனற்ற உறுப்பினர்கள் இருப்பதாகவும், பிரதமர் நரேந்திர மோடி இளைஞர்களை பணியமர்த்த வேண்டும் என்றும் ட்வீட் செய்துள்ளார். மோடி விரைவில் தன்னுடன் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் மீரா மிதுன் மேலும் கூறினார்.

"யாரும் உங்களுக்காக சரியாக வேலை செய்யவில்லை. நாங்கள் விரைவில் ஒரு நேரடி சந்திப்பை நடத்த வேண்டும். உங்கள் பணி உங்களால் செய்யப்பட வேண்டும் ஐயா எப்போதும். இந்தியா ஒருபோதும் யாருக்கும் ஒதுக்கவில்லை. இந்த பயனற்ற பாஜகவினர் நிறைய இருக்கிறார்கள். அவர்களால் உங்களது நேரம் வீணடிக்கப்பட்டது. எல்லோரையும் நிராகரியுங்கள். இளைஞர்களைக் கொண்டிருங்கள் " என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.