மாடலான மீரா மிதுன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற தன் மூலம் பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலே டாப் ஹீரோயினாக வந்துவிடலாம் என கனவு கண்டார். போன இடத்தில் சும்மா இல்லாமல் சேரனை வம்பிழுத்து, கொஞ்சம் நஞ்ச நல்ல பெயரையும் டேமேஜ் செய்துகொண்டார். இதனையடுத்து புக் ஆகியிருந்த பட வாய்ப்புகளும் ஒவ்வொன்றாக கழட்டிக் கொள்ள ஆரம்பித்தன. இதனால் செம்ம அப்செட்டான மீரா, மும்பையில் செட்டில் ஆனார்.

அங்கு போயும் சும்மா இருக்காமல் அவ்வப்போது ஆண் நண்பருடன் பப்பில் ஆட்டம் போடுவது, அரைகுறை உடையில் ஹாட் போட்டோஸ் எடுத்து வைரலாக்குவது, புகைப்பிடிப்பது, குடிப்பது போன்ற புகைப்படங்களை சோசியல் மீடியாவில் போட்டு மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு கன்டென்ட் கொடுத்து வருகிறார். 

மீரா மிதுனின் அலப்பறைகளிலேயே உச்சத்திலும், உச்சத்தில் இருப்பது அவரது சோசியல் மீடியா பக்கங்களில் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்கள் தான். அரைகுறை ஆடைகளைப் போட்டுக் கொண்டு டாப் ஆங்கிள் ஷாட்டில் புகைப்படங்களை எடுத்து சோசியல் மீடியாவில் ஷேர் செய்து வருகிறார். அதை பார்த்து கடுப்பான நெட்டிசன்கள் பலரும் மீரா மிதுனை கேவலமாக திட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.

இருந்தாலும் இதற்கெல்லாம் அசராத மீரா மிதுன், தற்போது டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முன்னழகு மொத்தமும் தெரியும் படியாக ஹாட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். குட் நைட் மெசேஜ் உடன் மீரா மிதுன் பதிவிட்டுள்ள அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது. 

மீரா மிதுனின் அதிரடி கவர்ச்சியைப் பார்த்த நெட்டிசன்கள் சிலரும் இப்படி டிரெஸ் போட்டு குட் நைட் சொன்னா எங்க தூங்கிறது என ஏக்கமாக கமெண்ட் செய்துள்ளனர். எவ்வளவு திட்டினாலும் அடங்காத மீரா மிதுனை ஒருபக்கம் நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.