Asianet News TamilAsianet News Tamil

கொஞ்சம் நஞ்சமா பேசுன? மீரா மிதுனுக்கு அதிரடியாக ஆப்பு வைத்த மாஜிஸ்திரேட்..!

சென்னை சைதாப்பேட்டை சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர் படுத்திய நிலையில், வழக்கை விசாரணை செய்த நீதிமதி, வரும் 27 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். 

Meera Mithun is currently in court custody
Author
Chennai, First Published Aug 15, 2021, 3:45 PM IST

நேற்றைய தினம் கேரளாவில் தலைமறைவாகி இருந்த மீரா மிதுனை தமிழ்நாடு போலீசார் கைது செய்த நிலையில், இவரிடம் சுமார் 2 மணிநேரத்திற்கு மேல் விசாரணை நடத்திய போலீசார் தற்போது சைதாபேட்டை மாஜிஸ்திரேட் முன் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பட்டியலின சமூகத்தினரையும் மற்றும் அச்சமூகத்தை சார்ந்த திரைப்பட இயக்குனர்களையும் மிகவும் இழிவாகவும், தரக்குறைவாகவும், பேசிய வீடியோ நடிகை மீரா மிதுன் வீடியோ வெளியிட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததால் இவரை போலீசார் கைது செய்ய வேண்டும் என பலர் சமூக வலைத்தளம் மூலமாகவும், நேரடியாக போலீசில் புகாரும் கொடுத்தனர். 

Meera Mithun is currently in court custody

அந்த வகையில், டுதலை சிறுத்தைகள் கட்சி வன்னி அரசு கொடுத்த புகாரின் பேரில் மீரா மிதுன் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பிய நிலையில், அவர் போலீசில் ஆஜராகாமல் மீண்டும் தன்னுடைய திமிர் பேச்சை அவிழ்த்து விட்டு வீடியோ வெளியிட்டு தலைவரைவானார். இவரை கைது செய்ய தீவிரமாக போலீசார் தேடி வந்தனர்.

Meera Mithun is currently in court custody

இந்நிலையில், நேற்று கேரளாவில் தலைமறைவாக இருந்த மீரா மிதுனை கைது செய்த போலீசார், அவரை இன்று காலை சென்னை கொண்டு வந்தனர். சுமார் இரண்டு மணிநேரம் இவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், தன்னுடைய வழக்கறிஞர் வந்தால் மட்டுமே வாக்குமூலம் கொடுப்பேன் என பிரச்சனை செய்து வந்தார் மீரா மிதுன். மேலும் தனக்கு போலீசார் உணவு கொடுக்கவில்லை, கையை உடைக்க முயன்றதாகவும் கத்தி கூச்சல் போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Meera Mithun is currently in court custody

இன்று மாலை போலீசார் இவரை, சென்னை சைதாப்பேட்டை சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர் படுத்திய நிலையில், வழக்கை விசாரணை செய்த நீதிமதி, வரும் 27 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். தன்னை யாராலும் கைது செய்ய முடியாது என, ஓவர் ஆட்டம் போட்ட மீரா மிதுன் தற்போது நீதிமன்ற காவலில் அடிக்கப்பட்ட உள்ளார். இதற்க்கு நெட்டிசன்கள் பலர் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.

 
 

Follow Us:
Download App:
  • android
  • ios