பிக்பாஸ் நிகழ்ச்சி முதல் இன்று வரை சர்ச்சைகளுக்கு பஞ்சமே இல்லாதவர் மீரா மிதுன். மாடலிங் துறையில் கவனம் செலுத்தி வந்த இவர், தனது சினிமா ஆசையை நிறைவேற்றி கொள்வதற்காக பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் காலடி எடுத்துவைத்தார். அங்கு முதல் நாளில் இருந்தே மீரா மிதுனை பிரச்சனைகள் சூழ்ந்து கொண்டன. அதுபோதாது என்று தேவையில்லாமல் சேரன் மீது பொய் புகார் கூறி, சேற்றை வாரிப்பூசிக்கொண்டார். இதனால் பார்வையாளர்களின் கோபத்திற்கு ஆளான மீரா மிதுன், அந்த நிகழ்ச்சியில் தோற்று வெளியேறினார். 

இதையும் படிங்க: பிரபல தொகுப்பாளினி அர்ச்சனா மகளுக்கு அடிச்சது ஜாக்பாட்... முதல் படத்திலேயே வேற லெவல் ஓபனிங்...!

அதன் பின்னர் அனைத்து பட வாய்ப்புகளும் கைவிட்டு போக, எப்படியாவது ஹீரோயினாக நடித்தே தீருவேன் என்று அரைகுறை ஆடையில் கண்கூசும் படியான கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார். அதை பார்த்து நெட்டிசன்கள் கடுப்பாகி கழுவி ஊத்தினாலும் கண்டுகொள்வதே இல்லை. 

இதையும் படிங்க: சொட்ட, சொட்ட நனைந்து... உச்சகட்ட கவர்ச்சி காட்டும் ஷாலு ஷம்மு... வசைபாடும் நெட்டிசன்கள்...!

ஆண் நண்பருடன் கவர்ச்சி ஆட்டம், ரோட்டில் சிகரெட் பிடிப்பது, டூப்பீஸ், படு பயங்கரமான ஓபன் போஸ் என மீரா மிதுன் செய்யாத சேட்டைகளே கிடையாது. தற்போது ஒரு புகைப்படத்தை அப்லோடு செய்து, “உங்களுக்கு சூடு சொரணையே இல்லையா ? அடுத்த முறை என்னை காப்பி அடித்தால் அந்த புகைப்படத்துடன் இதற்கு இன்ஸ்பிரேஷன் மீரா மிதுன் என போடுங்க. இல்லையென்றால் என்னை காப்பி அடிக்கிறது யாருனு நான் வெளிப்படையா சொல்ல வேண்டியது இருக்கும்” என பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: நயன்தாரா இடத்திற்கு துண்டு போடும் அனிகா... முன்னணி நடிகைகளையே தெறிக்கவைக்கும் போட்டோ ஷூட்...!

அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் தன்னுடைய கையில் வைத்துள்ள போனின் கவரின் கலர் தெரியும்படி போட்டோ போட்டிருப்பார். நயன்தாராவும் இதே போல ரெட் கலர் கவர் உடைய போனுடன் போஸ் கொடுத்துள்ள போட்டோவை வைரலாக்கி மீரா மிதுன் நயன்தாராவை தான் எச்சரிக்காறாரோ என கேள்வி எழுப்பி வருகின்றனர்.