மாடலான இவர், தன்னை சூப்பர் மாடலாக பெருமிதத்துடன் கூறிவருகிறார். மேலும், 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களிலும் சிறு வேடங்களில் நடித்திருக்கிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பெரும் பிரபலமான மீராமிதுன், குறிப்பாக சேரன் மீது கூறிய குற்றச்சாட்டால் மக்களுக்கு பெரும் பரிட்சயமானார். தொடர்ந்து அவரது சர்ச்சைக்குரிய ஆடியோக்களும் வெளியாகி டைம் லைனிலேயே உள்ளார்.

இப்படி சர்ச்சையின் நாயகியாக திகழ்வதால் அடுத்தடுத்து படங்களில் இருந்து நீக்கப்பட்ட அவர், தமிழகத்தில் தமிழனுக்கு வாழ வழியில்லை என்று கூறிவிட்டு பாலிவுட்டுக்கு சென்றுவிட்டார்.


 
மும்பையில் இருந்தபடியே கவர்ச்சியான போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு அதகளப்படுத்தி வருகிறார். 

இந்நிலையில், அரைநிர்வாணத்தில் எடுக்கப்பட்ட ஃபோட்டோவை தனது டுவிட்டர் பக்கத்தில் மீராமிதுன் பதிவிட்டுள்ளார். அதில், "ஒரு பெண்ணுடைய கனவின் காலாவதி தேதியை யார் தீர்மானிக்கிறார்கள்" என்ற கேப்ஷனுடன் பதிவிடப்பட்டுள்ள அந்த ஃபோட்டோவில்,  மேலே உள்ளாடை எதுவும் அணியாமல் பேருக்கென, வலை போன்ற ட்ரான்ஸ்பரன்ட் உடையை உடுத்தியிருக்கிறார். 

மீராமிதுனின் இந்த அரைநிர்வாண... அதிரடியான போட்டோதான் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.