பிக்பாஸ் வீட்டில் நேற்று நடந்த ரகளை, இந்த நிகழ்ச்சியின் மீதான ஆர்வத்தை பல மடங்கு அதிகரிக்க செய்துள்ளது. மேலும் நேற்றைய நிகழ்ச்சியின் எபக்ட் இன்றும் தொடர்கிறது என்பது இன்றைய முதல் ப்ரோபோ மூலம் தெரிகிறது.

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், மீரா மிகவும் கோபமாக "நடிப்புக்கு மொழி தேவையில்லை, ஊமையா இருக்குறவங்க கூட நடிக்கலாம் என கூறுகிறார். பின் அங்கு ஏதோ சலசலப்பு நடக்க, திடீர் என எழுந்து வரும் சாக்ஷி, கலாச்சாரம் குறித்த வித்தியாசத்தை இந்த இடத்தில் கொண்டு வராதீர்கள் என கத்திவிட்டு அந்த இடத்தை விட்டு செல்கிறார் இவரின் பின்னாடியே ஷெரினும் செல்கிறார்.

இதைத்தொடர்ந்து பேசும், மீரா... எல்லோருக்கும் அவரவர் கருத்தை சொல்ல உரிமை இருக்கிறது. கடந்த ஐந்து வாரமாக நான் எந்த தவறும் செய்யாமல் என்னை நாமினேட் செய்து கொண்டிருக்கிறீர்கள் என அவரின் தரப்பில் உள்ள நியாயத்தை கூறுகிறார்.

மற்றொரு புறம், சாக்ஷி மற்றும் ஷெரின் ஆகியோர் தனங்களை கலாச்சாரம் குறித்தும் மொழி பற்றியும் பேசி வேறுபடுத்துவதாக கூறி, குலுங்கி குலுங்கி அழுகிறார்கள். இவர்கள் இப்படி அழும் அளவிற்கு பிக்பாஸ் வீட்டில் என்ன பிரச்சனை நடக்கிறது என்பதை இன்றைய நிகழ்ச்சியில் தான் பார்க்க முடியும்.