மாஸ் காட்டும் மாவீரன்.. முதல் நாளே இத்தனை கோடி வசூலா? வெளியான செம அப்டேட்..
சூப்பர் ஹீரோ – பேண்டசி படமாக உருவாகி உள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களே கிடைத்துள்ளது.
தனது முதல் படமான மண்டேலா படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் மடோன் அஷ்வின். யோகி பாபு முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த மண்டேலா படம் விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் சர்வதேச அளவில் பல விருதுகளையும் குவித்துள்ளது. இந்த படத்தை தொடர்ந்து மடோன் அஷ்வின், சிவகார்த்திகேயனை இயக்கிய படம் மாவீரன். இப்பத்தில் அதிதி ஷங்கர், சரிதா, மிஷ்கின், சுனில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் பாடல்கள், ட்ரெய்லர் ஆகியவற்றுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்த நிலையில் மாவீரன் படம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. சூப்பர் ஹீரோ – பேண்டசி படமாக உருவாகி உள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களே கிடைத்துள்ளது.
'லியோ' படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்தது! புகைப்படத்துடன் அறிவித்த லோகேஷ் கனகராஜ்!
தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலும் மாவீரன் படம் வெளியகி உள்ளது. இந்த நிலையில் ரிலீஸான அனைத்து இடங்களிலும் வசூலை குவித்து வருகிறது. அதன்படி வெளியான முதல் நாளிலேயே மாவீரம் படம் ரூ.8 கோடி முதல் ரூ.10 கோடி வரை வசூல் செய்திருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக தமிழகத்தில் மட்டும் இப்படம் ரூ.6 முதல் ரூ.8 கோடி வரை வசூல் செய்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. வெளிநாடுகளில் ரூ.2 கோடி வரை வசூல் செய்திருக்க வாய்ப்புள்ளது.
மாவீரன் படத்தின் டீசர், ட்ரெய்லர் ஆகியவை இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்த நிலையில், விஜய் சேதுபதி இப்படத்திற்கு குரல் கொடுத்திருந்தது அந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தது. மேலும் தமிழ் சினிமாவில் ஒருகாலத்தில் உச்சத்தில் இருந்த நடிகைகளில் ஒருவரான சரிதா இப்படத்தின் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார். அவரின் நேர்த்தியான நடிப்பையும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். மேலும் மிஷ்கின் கதாப்பாத்திரமும் சுவாரஸ்யமாக இருப்பதாகவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். எனவே தற்போது வீக்-எண்ட் என்பதால் இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
'மாவீரன்' படத்திற்காக விஜய் சேதுபதி வாங்கிய சம்பளம்? வெளியான ஆச்சர்ய தகவல்..!
- maaveeran
- maaveeran audio launch
- maaveeran audio launch full show
- maaveeran audio launch sk speech
- maaveeran movie
- maaveeran movie review
- maaveeran movie review tamil
- maaveeran movie songs
- maaveeran movie trailer
- maaveeran public review
- maaveeran review
- maaveeran songs
- maaveeran tamil full movie
- maaveeran tamil movie
- maaveeran teaser
- maaveeran trailer
- sivakarthikeyan maaveeran
- sivakarthikeyan maaveeran movie update
- sivakarthikeyan maaveeran songs
- maaveeran box office
- maaveeran collection