லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் ஹீரோவாகவும், விஜய் சேதுபதி வில்லனாகவும் முதன் முறையாக இணைந்துள்ள மாஸ்டர் திரைப்படம் எப்போது திரைக்கு வரும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், சாந்தனு உள்ளிட்டோர் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் ரிலீஸ் கொரோனா பிரச்சனையால் பாதிக்கப்பட்டது.இடையில் மாஸ்டர் திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக வதந்தி பரவியது. 

தற்போது அனைத்து விதமான வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, மாஸ்டர் திரைப்படம் நிச்சயம் தியேட்டரில் தான் வெளியாகும் என தயாரிப்பாளர்கள் தரப்பு உறுதி அளித்துள்ளது. ஆனால் எந்த தேதியில் வெளியாகும் என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல்கள் இல்லை. மேலும் தென்னிந்திய மொழிகளான தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடத்தை தவிர இந்தியிலும் மாஸ்டர் திரைப்படத்தை வெளியிட உள்ளதால் அதற்கான பணிகள் ஒருபுறம் நடைபெற்று வருகின்றன. 

பான் இந்தியா திரைப்படமாக உருவாக உள்ள மாஸ்டர் படத்தை பொங்கலுக்கு முந்தைய தினமான ஜனவரி 13ம் தேதி வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. நேற்று முதல்வரை சந்தித்த நடிகர் விஜய்யும் தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கும் படி கோரிக்கை விடுத்துள்ளதோடு, மாஸ்டர் ரிலீசுக்கு ஒத்துழைக்கும் படியும் கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. 

 

இதையும் படிங்க: “ஏ.ஆர்.ரகுமானை ஆளாக்கியதில் பெரும்பங்கு வகித்தவர்”... முதலமைச்சர் பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல்...!

சற்று நேரத்திற்கு முன்பு தியேட்டர் உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு தியேட்டர்களில் ரிலீஸ் ஆகும் என உறுதியாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஒளிக்கும் பேர் ஒன்று அரங்கமே அதிர வைக்கும்! தடுக்கும் காலம் தாண்டி அது பரவி நிற்கும்!” மாஸ் ரிலீஸ் அப்டேட் நாளை நண்பகல் 12.30 மணிக்கு வெளியாக உள்ளதாக அறிவித்துள்ளது. விஜய் ரசிகர்கள் அனைவரும் ‘ஐ எம் வெயிட்டிங்’என கொண்டாட காத்திருக்கின்றனர்.