மாஸ்டர் படம் ஓடிடி தளத்தில் வெளியாக வாய்ப்புகள் உள்ளதாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், இது குறித்த உண்மை தகவலை 'மாஸ்டர்' படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ பிரபல தனியார் ஊடகம் ஒன்றிற்கு கொடுத்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்: ”இந்த பூனையும் கபசுர குடிநீர் குடிக்குமா”ங்கிற Range-க்கு நின்னா என்ன அர்த்தம்? பார்த்திபனின் நச் ட்விட்!
 

'கைதி' படத்தின் சூப்பர் ஹிட் வெற்றிக்கு பிறகு, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் "மாஸ்டர்". இந்த படத்தின் ஷூட்டிங் அனைத்தும் ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் தற்போது இறுதிக்கட்ட பணிகளும் நடந்து முடிந்துள்ளது. எனவே இந்த படத்தின் மீதான, எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் வெறித்தனமான உள்ளது. 

இந்த படத்தில் முதன் முறையாக தளபதி விஜய்க்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ளார். அதனால் இருதரப்பு ரசிகர்களும் படத்தை காண ஆவலுடன் எகிறியுள்ளது. 

மேலும் செய்திகள்: ஒரே படத்தில் தமிழ் ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்த டாப் இயக்குனர்கள்..!
 

கொரோனா பிரச்சனை மட்டும் இல்லை என்றால் "மாஸ்டர்" திரைப்படம் ஏப்ரல் 9ம் தேதி வெளியாகியிருக்க வேண்டியது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் அனைத்தும் மார்ச் மாதமே மூடப்பட்டது. "மாஸ்டர்" திரைப்படம் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22ம் தேதி அன்று ரிலீஸ் ஆகும் என தகவல்கள் வெளியாகின. தொடர்ந்து கொரோனா பிரச்சனை விடாப்பிடியாக பரவி வருவதால், திரையரங்குகள் திரைப்பட்டவுடன் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்தனர்.

ஆனால், தொடர்ந்து படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகி வருவதால், பிரபல ஓடிடி நிறுவனம் 'மாஸ்டர்' பட தயாரிப்பாளரை அணுகியதாகவும் இதனால், ஓடிடி தளத்தில் படம் வெளியாக வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியானது. இதுகுறித்து பிரபல ஊடகம் ஒன்றின் பேட்டியின் சேவியர் பிரிட்டோவிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், அதற்கு வாய்ப்பே இல்லை, விஜய் மிகவும் தெளிவாக இருக்கிறார் திரையரங்கில் தான் வெளியிட வேண்டும் என்பதில்.

மேலும் செய்திகள்: நடிகர் சூர்யா வீட்டில் இவ்வளவு வசதிகள் உள்ளதா? பிரமிக்க வைக்கும் பிரமாண்டம்..! வாங்க பார்க்கலாம்..!
 

மேலும் இது பெரிய பட்ஜெட் படம் என்பதால், திரையரங்கில் தான் வெளியிடப்படும். அது தீபாவளிகா, அல்லது பொங்கலுக்கா என்பது தெரியவில்லை. கொரோனா பிரச்சனை முடிவுக்கு வந்த பின்னரே, முடிவு செய்யப்படும் என்றும், கண்டிப்பாக சூப்பர் ஹிட் வெற்றி படமாக இது இருக்கும் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.