நக்கல் நையாண்டிக்கு குறைவில்லாமல் பேசும், நடிகர் பார்த்திபன்... நேற்று வெளியான துக்ளக் தர்பார் படத்தில் நடித்த புகைப்படத்தை வெளியிட்டு... விஜய் சேதுபதியிடம் பேசுவது போல் ஒரு ட்விட் செய்துள்ளார். இந்த ட்விட் தற்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது.

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, ஹீரோவாக மட்டுமே நடிக்காமல், அழுத்தமான வில்லன் வேடத்தில் நடித்து, மிரட்டி வருகிறார் என்பது நாம் அறிந்தது தான். அந்த வகையில் இவர் நடித்து வெளியான, விக்ரம் வேதா, பேட்ட, போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடந்து தற்போது தளபதி விஜய்யுடன் இவர் நடித்துள்ள, 'மாஸ்டர்' திரைப்படம் அனைத்து பணிகளும், முடிவடைந்தும் கொரோனா பிரச்சனை காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் இன்னும் வெளியாகாமல் உள்ளது. இந்த படத்திற்காக வெறித்தனமாக காத்திருக்கின்றனர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி ரசிகர்கள்.

இந்நிலையில், விஜய் சேதுபதி நடித்துள்ள அரசியல் த்ரில் திரைப்படமான 'துக்ளக் தர்பார்' திரைப்படத்தின் படப்பிடிப்பும் கொரோனா பிரச்சனை காரணமாக நிறுத்தப்பட்டது. இந்த படத்தின் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் நேற்று மாலை 5 மணிக்கு வெளியானது.

அந்த போஸ்டரில் விஜய் சேதுபதி ஒரு டேபிளின் முன்பு நின்றிருக்க கீழே தெரியும் பிரதிபலிப்பில் வேறொரு விஜய் சேதுபதி தெரிவது போல் காட்டப்பட்டுள்ளது. பிரசாத் தீனதாயளன் என்ற அறிமுக இயக்குநர் இயக்கியுள்ள இந்த படத்தில் பார்த்திபன், அதிதி ராவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 

இந்த படத்தில் விஜய் சேதுபதி அரசியல்வாதியாக நடித்துள்ளார். இவருக்கு சமனான அரசியல்வாதி கெட்டப்பில் பார்த்திபன் நடித்துள்ளார்.  இந்நிலையில் இந்த படத்தின் புகைப்படத்தை வெளியிட்டு, பார்த்திபன் சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளதாவது, நானும் ரவுடிதான்,நீயும் ரவுடிதான்.இன்னைக்கு உன் துக்luck தர்பார் எவ்வளவு பெரிய Level-ல இருக்குன்னு எனக்கு தெரியாதுன்னு நினைச்சுகிட்டு”இந்த பூனையும் கபசுர குடிநீர் குடிக்குமா”ங்கிற Range-க்கு பவ்யமா கையை கட்டிகிட்டு நின்னா என்ன அர்த்தம்?  உன் MASTER plan தான் என்ன? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு விஜய் சேதுபதி என்ன பதில் சொல்வார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் .