மாஸ்டர் படத்தை, இயக்கி முடித்துள்ள இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக கமல் தயாரிப்பில், ரஜினிகாந்த் நடிக்க உள்ள படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகி, ரஜினி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

சினிமா உலகில் அடியெடுத்த வைத்த காலத்தில் ரஜினிகாந்த் - கமல் ஹாசன் ஒன்றாக இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்கள். ஆனால் ஒரு காலகட்டத்திற்கு பிறகு, அதாவது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஒளிர ஆரம்பித்த பிறகு இருவரையும் ஒரே படத்தில் இணைப்பது என்பது சாத்தியமில்லாத காரியமாக மாறிப்போனது. தனது 65வது பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடி முடித்த கமல் ஹாசனுக்கு மீண்டும் ரஜினியுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. அதனால் அதற்கான முயற்சிகளில் இறங்கினார் என கூறப்பட்டது. 

 மேலும் செய்திகள்: ஆண்ட்டி வயதிலும் உச்ச கவர்ச்சியில் அதகளம் பண்ணும் பிக்பாஸ் ரேஷ்மா..! கொஞ்சம் ஓவராகவே ரசிக்கும் இளசுகள்!
 

அப்போது இருவரும் சினிமாவை தாண்டி அரசியலில் அதிகமாக கவனம் செலுத்தி வந்தனர். அதனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ஒரு மாஸ் படத்தை தயாரிக்க வேண்டுமென முடிவு கமல் முடிவு செய்தார். விஜய் நடிப்பில் மாஸ்டர் படத்தை இயக்கி வரும் லோகேஷ் கனகராஜ் சூப்பர் ஸ்டாரின் அடுத்த படத்தை இயக்க உள்ளதாகவும்,  அதை கமல் ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. 

 மேலும் செய்திகள்: பிச்சைக்காரரை தொழிலதிபராக மாற்றிய கொரோனா...! ஒரு லட்சம் தர ஆசைப்படுவதாக கூறி நெகிழ வைத்த ராகவா லாரன்ஸ்!
 

முதலில் கமல் ஹாசனுக்காக வடிவமைக்கப்பட்ட இந்த கதையில் ரஜினிகாந்த் நடித்தால் நன்றாக இருக்கும் என உலக நாயகன் தான் முடிவு செய்தார். நான் நடிக்காவிட்டாலும் ரஜினி நடிக்க ஒப்புக்கொண்டால் அந்த படத்தை நானே தயாரிக்கிறேன் என்று கமல் கூறியதாகவும். இதையடுத்து லோகேஷ் கனகராஜ் சொன்ன கதை பிடித்து போக, ரஜினிகாந்த் நடிக்க ஒப்புக்கொண்டதாக கூறப்பட்டது.

 மேலும் செய்திகள்: பிரமிக்க வைக்கும் லெஜெண்ட் சரவணா ஸ்டோர் அருளின் புதிய வீடு..! சும்மா கண்ணாடி போல் பளபளக்கும் பங்களா!
 

இதனால் விரைவில் படத்திற்கான பூஜை எல்லாம் போட உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அந்த தகவல்களை ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் மறுத்தது எனதும் குறிப்பிடத்தக்கது. அந்த படத்தில் நடிக்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 100 கோடி சம்பளம் கேட்பதாகவும், அதனால் கமல் ஹாசன் பட வேலைகளை நிறுத்திவிட்டதாகவும் கூட  வதந்திகள் பரவின. எனினும் ரஜினி ரசிகர்கள் லோகேஷ் கனராஜ் இயக்கத்தில் தலைவர் இணைந்து நடிக்க வேண்டும் என்று தங்களுடைய ஆசையை வெளிப்படுத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 மேலும் செய்திகள்: வாவ்... அசரவைக்கும் நடிகர் சிவகார்த்திகேயனின் பிரமாண்ட வீடு..! வாங்க பார்க்கலாம்..!
 

இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள தகவலில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக தெலுங்கு முன்னணி நடிகர் ஒருவர் நடிக்க உள்ள படத்தை இயக்க உள்ளதாகவும், இந்த படம், தெலுங்கு மொழி மட்டும் இன்றி, தமிழிலும் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளியாகாத நிலையில், விரைவில் இது குறித்த உண்மை தகவல் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.