நடிகர் மாஸ்டர் பரத்தின் தாயார் கமலா ஹாசினி சென்னையில் காலமானார். திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Master Bharath Mother Passed Away : இளம் நடிகர் மாஸ்டர் பரத்தின் தாயார் கமலா ஹாசினி மரணமடைந்தார். தாயின் மறைவால் பரத் மிகுந்த துயரத்தில் உள்ளார். குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்தவர் பரத். அவரின் தாயார் கமலா ஹாசினி மாரடைப்பால் மரணமடைந்ததாக கூறப்படுகிறது. பரத்தின் தாயார் கமலா ஹாசினி மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது மறைவு பரத்துக்கு பேரிழப்பாக அமைந்துள்ளது. அவருக்கு பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர்.
யார் இந்த மாஸ்டர் பரத்?
80க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் மாஸ்டர் பரத். உத்தமபுத்திரன், போக்கிரி, பஞ்சதந்திரம் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களிலும் அவர் நடித்திருக்கிறார். குறிப்பாக போக்கிரி படத்தில் அசினுக்கு தம்பியாக இவரின் நடிப்பு பாராட்டுக்களை பெற்றது. வளர்ந்த பின்னர் எதிர்பார்த்த அளவுக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தெலுங்கு படங்களில் மட்டும் அவ்வப்போது நடித்து வருகிறார் மாஸ்டர் பரத்.
சமீபத்தில் விஸ்வம் என்கிற தெலுங்கு படத்தில் துணை வேடத்தில் நடித்தார். அல்லு சிரிஷ் உடன் நடித்த ஏபிசிடி படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. தென்னிந்திய சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக தனக்கென தனி இடத்தைப் பிடித்தவர் பரத். சமீபகாலமாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த பரத்துக்கு தாயின் மறைவு பேரிடியாக விழுந்துள்ளது. அவருக்கு ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.
