தளபதி விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து முடித்துள்ள, 'மாஸ்டர்' திரைப்படம், கோடை விடுமுறையை முன்னிட்டு, ஏப்ரல் 9 ஆம் தேதியே உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகியிருக்க வேண்டிய நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக போடப்பட்டுள்ள, ஊரடங்கால் அணைத்து திரையுல பணிகளும், தியேட்டர்களும் மூடங்கியுள்ளதால், படத்தை குறிப்பிட்ட தேதிக்குள் ரிலீஸ் செய்யமுடியவில்லை.

மேலும் செய்திகள்: உயிருக்கு உயிராய் காதலித்து பிரிந்த முன்னணி நடிகர் - நடிகைகள்..! புகைப்பட தொகுப்பு!
 

நாளுக்கு நாள் தமிழகத்தில் கொரோனா பிரச்சனை அதிகரித்து கொண்டே வருவதால், நான்காம் கட்ட ஊரடங்கு, வித்தியாசமானதாக இருக்கும் என கூறியுள்ளார் பிரதமர் மோடி. ஆனால் அது எப்படி பட்டதாக இருக்கும் என்பது குறித்து இதுவரை தெரிவிக்கவில்லை.

மேலும் திரையுலகை சேர்ந்த தொழிலாளர்களுக்கு, சில தளர்வுகள் கொண்டு வந்தாலும், மக்கள் ஒன்று கூடும் இடங்கள் மீண்டும் இயக்கப்படுவது சந்தேகமா? கொரோனா பாதிப்பு குறைந்து, சில தினங்கள் ஆன பிறகே வழக்கம் போல் திரையரங்குகள் செயல்பட வாய்ப்புள்ளது.

மேலும் செய்திகள்: பிரதமரின் திட்டத்தை வரவேற்கிறோம்..! பலனளிக்குமா? காலத்தே கிடைக்குமா? கமல் போட்ட ட்விட்!
 

இந்நிலையில் பிரபல திரையரங்க உரிமையாளர், மாஸ்டர் மற்றும் சூரரை போற்று படங்கள் ரிலீஸ் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்: கொரோனா அச்சுறுத்தலில் கோத்தகிரி பயணம்..! தனிமை படுத்தப்பட்ட நடிகர் ராதாரவி உட்பட 8 பேர்!
 

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது,  'மாஸ்டர், சூரரைப் போற்று படங்கள் தான் மீண்டும் தியேட்டருக்கு ரசிகர்களை பெருமளவு ஈர்க்கும் வாய்ப்பு கொண்ட படங்கள். அதனால் அதன் தயாரிப்பு நிறுவனங்கள், படத்தின் ரிலீஸ் குறித்து முக்கியமான முடிவை எடுக்க வேண்டும். தனிப்பட்ட முறையில் அது தீபாவளி ரிலீஸாக இருக்க வேண்டும் என விரும்புவதாக''  அவர் தன்னுடைய கருத்தை பதிவிட்டுள்ளார். இதையடுத்து இவ்விரு படங்களும் தீபாவளிக்கு ரிலீஸாகுமா? என ரசிகர்கள் எதிர்பார்க்க துவங்கியுள்ளனர்.