தமிழ் சினிமாவில் முன்னணி குணச்சித்திர நடிகராக இருக்கும் நடிகரும், நடிகை ராதிகாவின் சகோதரருமான ராதாரவி, சென்னையில் இருந்து குடும்பத்தினர் 8 பேருடன் கோத்தகிரிக்கு பயணம் மேற்கொண்டதால் அவரை சுகாதார துறையினர் தனிமை படுத்தி, அவர் வீட்டின் முன் தனிமை படுத்தப்பட்டாக ஸ்டிக்கர் ஒட்டியுள்ளனர்.

மேலும் செய்திகள்: பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறாரா டிக் டாக் இலக்கியா? தீயாய் பரவும் தகவல்!
 

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி எம் கைகாட்டி மார்வளா பகுதியில் நடிகர் ராதாரவிக்கு சொந்தமான பங்களா உள்ளது. இங்கு தன்னுடைய குடும்பத்தினருடன் கடந்த 10 ஆம் தேதி முதல் நடிகர் ராதாரவி தங்கியுள்ளார். சுகாதார அதிகாரிகள் ராதாரவி வீட்டிற்கு சென்று ஆய்வு செய்து அவருடைய குடும்பத்தினர் எட்டு பேர் தங்கியிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

சென்னையில் இருந்து உரிய அனுமதி பெற்ற பின்பே இங்கு அவர்கள் வந்திருப்பதாக நடிகர்  ராதாரவி தெரிவித்தார். எனினும் ராதாரவி உட்பட அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர்.

மேலும் செய்திகள்: சோறு... தண்ணி... இல்லாமல் 40 நாள் தவித்த 11 பெண்கள்! ஒரே ஒரு போன் காலில் காப்பாற்றிய விஜய்!
 

இவர்களுக்கு கொரோனா அறிகுறிகள் இல்லை என்றாலும், அனைவரையும் தனிமையில் இருக்கும் படி அறிவுறுத்தியுள்ளனர்.  இதையடுத்து வீட்டில் தனிமை படுத்தப்பட்ட ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு 8 பேரையும் தனிமைப்படுத்தி உள்ளனர்.

குறிப்பாக இவர்கள்  வீட்டிலிருந்து வெளியே செல்லக்கூடாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கி கொடுக்க ஏதுவாக தன்னார்வலர்கள் பணி அமர்த்தப்படுவார்கள் என கூறி அதற்கும் ஏற்பாடுகள் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.