இந்தியில் 13 சீசன்கள் வரை கடந்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி, தற்போது தான், தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் 2 அல்லது 3 சீசன்களையே கடந்துள்ளது.  

தமிழில் பிக்பாஸ் சீசன் 3 கடந்த வருடம் வெற்றிகரமாக நிறைவடைந்தது. இதில் மலேசிய பாப் பாடகர், முகேன் வெற்றி பெற்றார். ஆரம்பத்தில் இருந்தே பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, தர்ஷன், லாஸ்லியா, கவின் ஆகியோர் ஒரு சில காரணங்களால் வெற்றிபெறவில்லை.

ஒரு வேலை பிக்பாஸ் கொடுத்த 5 லட்ச ரூபாய் பணத்தை எடுத்து கொண்டு,  கவின் வெளியில் வரவில்லை என்னால், அவரே வெற்றியாளராக மாறியிருக்கலாம். லாஸ்லியா பைனல் போக வேண்டும் என்பதற்காக கவின் தானாக வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்: கொரோனாவில் இருந்து குடும்பத்தை காப்பாற்ற அமெரிக்கா பறந்த சன்னி லியோன்!
 

இதை தொடர்ந்து ஜூன் மாதம் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி ஆரம்பமாகும் என தகவல் வெளியாகியுள்ளது. ஓவ்வொரு  நாளும் பிக்பாஸ்  நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் ரீல் லைப் பிரபலங்கள் ரியல் வாழ்க்கையில் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை தெறித்து கொள்ளவே பலர் பிக் பாஸ்  நிகழ்ச்சியை விரும்பி பார்க்கிறார்கள்.

முதல் சீசனில் ஜூலி, காயத்ரி, ஓவியா, இரண்டாவது சீசனில் மகத், மூன்றாவது சீசனில் மீரா மிதுன் ஆகியோர் தான் சர்ச்சைகளுக்கும், டி.ஆர்.பி.க்கும் முக்கியமான நபர்களாக திகழ்ந்தனர். இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு வந்தால் புகழும், பட வாய்ப்புகளும் கிடைக்கும் என்பதால் ஏராளமானோர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க ஆர்வம் காட்டி வருகின்றனர். 

மேலும் செய்திகள்: பொக்கிஷம் போன்றது... இதுவரை யாரும் பார்த்திட முடியாத அரிய புகைப்படத்தை பகிர்ந்த நடிகை குஷ்பு!
 

அந்தவகையில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக ஏற்கனவே நடிகை சுனைனா, அமிர்தா, அதுல்யா, இடையழகி ரம்யா பாண்டியன் ஆகியோர் பெயர் அடிபட்ட நிலையில், விஜய் டிவி மூலம் பிரபலமான சிலரும் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

அந்த வகையில், புகழ், விஜே மணிமேகலை, மற்றும் ஷிவாங்கி மற்றும் டிக் டாக் செயலியில் இரட்டை அர்த்த வசனங்களை பேசி பிரபலமான இலக்கியா கலந்து கொள்ள உள்ளதாக, சமூக வலைத்தளத்தில் தீயாய் ஒரு தகவல் உலாவி வருகிறது. இதுபோன்ற தகவல்கள் தொடர்ந்து வந்தாலும், பிக்பாஸ் தரப்பினர் மத்தியில் இருந்து வெளியாகும் தகவலே உறுதியானது.