பாலிவுட் திரையுலகின் கவர்ச்சி கன்னி,  நடிகை சன்னி லியோன்... தற்போது இந்தியாவில் பரவி வரும் கொரோனாவில் இருந்து தன்னுடைய குடும்பத்தை காப்பாற்ற, மும்பையில் இருந்து, அமெரிக்காவுக்கு பறந்துள்ளார். இதனை சன்னி லியோன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் உறுதியும் செய்துள்ளார்.

இந்தியாவை விட அமெரிக்காவில் தான் கொரோனா பிரச்சனை அதிகமாக இருந்தாலும், அங்கு தான் தன்னுடைய குழந்தைகளுக்கும், குடும்பத்திற்கும் பாதுகாப்பு என எண்ணி, சன்னி லியோன் இங்கிருந்து, அங்கு சென்றிருப்பது, பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 

அமெரிக்கா, லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள தனது வீட்டின் கார்டனில்  குழந்தைகளுடன் பாதுகாப்பாக இருப்பதாகவும், கண்ணுக்கு தெரியாத வைரஸில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க இதுவே சரியான இடம் என்றும், தனது அம்மா இருந்திருந்தால் கூட இதை தான் செய்திருப்பார் என்றும் சன்னி லியோன் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் மற்ற இடங்களை விட, சன்னி லியோன் வசிக்கும் பகுதியில் கொரோனா பாதிப்பு குறைவாகவே இருப்பதாக கூறப்படுகிறது.

வெளிநாட்டில் உள்ளவர்கள், இந்தியாவிற்குள் வரமுடியாமலும், இங்கிருப்பவர்கள் வெளிநாட்டிற்கு செல்லமுடியாமலும் பலர் அவதி பட்டு வரும் நிலையில், சன்னி லியோனுக்கு மட்டும் எப்படி விமான சேவை கிடைத்தது என பலர் கேள்வி எழுப்பி வந்த நிலையில், இதற்கு பதில் அளித்துள்ள சன்னி லியோனின் கணவர், ‘அரசின் KLN  சிறப்பு விமானத்தில் மூலம் மும்பையில் இருந்து அமெரிக்க வந்ததாக தெரிவித்துள்ளார்.