கொரோனா வைரஸ் தாக்கத்தால் தற்போது போடப்பட்டுள்ள ஊரடங்கு, பிரபலங்கள் பலரையும் மீண்டும் தங்களுடைய பழைய நினைவுகளை நினைத்து பார்க்க வைத்துள்ளது. அந்த வகையில் நடிகை குஷ்பு அடிக்கடி தன்னுடைய சிறிய வயது புகைப்படங்கள், சகோதரருடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ஆச்சர்யப்படுத்தி வருகிறார்.

அதே நேரத்தில்,  அம்மா குஷ்புவை விஞ்சும் அளவிற்கு, அவருடைய மகள் அனந்திதா உடல் எடையை குறைத்து, விதவிதமான உடைகள் அணிந்தும், புடவையிலும் அழகாய் தோன்றி புகைப்படங்கள் வெளியிட்டு நெட்டிசன்களை கவர்ந்து வருகிறார். தன்னை விமர்சிப்பவர்களுக்கும் அதிரடியாக பதிலடி கொடுக்கிறார்.

இந்நிலையில் நடிகை குஷ்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய காதல் கணவர் சுந்தர்.சியின் சிறிய வயது புகைப்படம் ஒன்றை பகிர்ந்து, ''சில விஷயங்கள் எப்பொழும் பொக்கிஷம் போன்றது என்று கூறியுள்ளார். சுந்தர்.சி சிறிய வயதில்,  உறவினர்களோடு எடுத்து கொண்ட  அரிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதில் 15 வயது சிறுவன் போல் காட்சியளிக்கும் சுந்தர்.சி சற்றும் அடையாளம் தெரியாத அளவில் உள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

கடந்த வருடம், நடிகர் விஷால் நடித்த 'ஆக்ஷன்' படத்தை அதிரடியாக இயக்கி இருந்த இவர், அடுத்ததாக அரண்மனை'  படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்கி வருகிறார். இதில், ஆர்யா, கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார். மேலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் சாக்ஷி அகர்வால், யோகி பாபு, நடிகர் விவேக் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

விறுவிறுப்பாக நடந்து வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு ஊரடங்கு தற்போது, திரையுலக பணிகள் அனைத்தும் முடங்கியதால், நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திரைப்பட பணிகள் மீண்டும் ஆரம்பமாகும் போது இந்த படத்தின் படப்பிடிப்பும் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் நடிகை குஷ்புவும் நீண்ட இடைவெளிக்கு பின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து 'அண்ணாத்த' படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.