கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மக்களை காக்கும் விதமாக 3 வது கட்டமாக ஊரடங்கு பிறப்பிக்கட்ட போதிலும், கோரோனோ வைரஸால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது. தமிழகத்தில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, இதுவரை 8000யிரத்திற்கும் அதிகமாக உள்ளது.

இந்நிலையில்,  மே 17ம் தேதியுடன், 3 ஆம் கட்ட ஊரடங்கு முடிய உள்ள நிலையில், நேற்று 8 மணிக்கு உரையாற்றிய பிரதமர் மோடி 4ம் கட்ட ஊரடங்கு வித்தியாசமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும், அவர் பேசுகையில், இதுவரைக்கும் பிபிஇ கவச உடைகளை இந்தியா தயாரித்தது இல்லை இன்றைக்கு 2லட்சம் உடைகளை தயாரிக்கிறது. எண்9 முக கவசம் மட்டும் ஒரு நாளைக்கு 2லட்சம் தயாரித்து வருகின்றது. இந்தியா பல்வேறு முறைகளில் முன்னேற்றம் காணுகிறது. இதுபோன்ற மோசமான நிலையை இந்தியா சந்தித்தது இல்லை. மக்கள் வாழ்க்கையை வாழ்வா? சாவா? என்று தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்தியாவின் மாற்றங்களை உலகமே உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறது.நாமும் உலகத்தை உற்றுநோக்கிக்கொண்டிருக்கிறோம். இந்தியாவின் மாற்றங்கள் உலகையே மாற்றி அமைக்கும். பொருளாதாரத்தை மீட்க ரிசர்வ் வங்கி மூலம் 20லட்சம் கோடி நிவாரண நிதி ஒதுக்கப்படுகிறது.இது உள்நாட்டு உற்பத்தியில் 10சதவிகிதம்.இதன் மூலம் அறிவிக்கப்படும் திட்டங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றார் மோடி. 

இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில் பிரபல நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான உலக நாயகன் கமலஹாசன், தன்னுடைய கருத்தை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, "உணவின்றி அழும் குழந்தைக்கும், பணமின்றி தவிக்கும் ஏழைக்கும், இப்போதேனும் அறிவித்திருக்கும் பிரதமரின் திட்டத்தை வரவேற்கிறோம். 

அதேநேரம் நடுத்தர, அடித்தட்டு ஏழை மக்களுக்கும் இத்திட்டம் பலனளிக்குமா? காலத்தே கிடைக்குமா என நான் மட்டுமல்ல ஒட்டுமொத்த நாடும் கவனித்துக் கொண்டிருக்கிறது". என கூறியுள்ளார். இவரின் இந்த கருத்தை பலர் வரவேற்று வருகிறார்கள்.