திரையரங்குகளில் மாஸ்க் அணிவது கட்டாயம்! புத்தாண்டு கொண்டாட்ட விதிமுறை குறித்து அறிவித்த புதுச்சேரி அரசு!
புதுச்சேரியில் பொது இடங்கள், திரையரங்குகளில் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றுவது கட்டாயம் என்றும், ஆங்கில புத்தாண்டு தினத்தன்று நள்ளிரவு 1 மணிக்கு மேல் கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் புதுச்சேரி அரசு அறிக்கை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
சீனாவில் இருந்து இலங்கை வழியாக மதுரை வந்த தாய் மற்றும் மகள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தாயும் - மகளும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்களுடன் விமானத்தில் வந்த 70 பயணிகளுக்கும் பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் புதிய வகை கொரோனா பரவல் எதிரொலியாக, தற்போது புதுச்சேரி அரசு புதிய நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
இது குறித்து புதுச்சேரி அரசு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, புதுச்சேரி மாநிலம் பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது... "புதுச்சேரியில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
உலக நாடுகளில், புதிய வகை கொரோனா (கோவிட் 19 ஒமேக்ரான் பி எப் 7) பரவல் அதிகரித்து வரும் நிலையில், புதுச்சேரியில் எதிர்வரும் பண்டிகை மற்றும் புது வருட கொண்டாட்ட காலங்களில் புதிய வகை கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசின், வழிகாட்டலின் பேரில் பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அமல்படுத்தப்படுகிறது".
மக்கள் அனைவரும் அனைத்து பொது இடங்கள், கடற்கரை, சாலை பூங்காக்கள் மற்றும் திரையரங்குகளில் கண்டிப்பாக முக கவசம் அணிந்து, சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும். எதிர்வரும் புது வருட கொண்டாட்டங்களுக்கு 01.01.2023 அன்று 1 மணிக்கு மேல் தடை விதிக்கப்பட்டது. அனைத்து உணவகங்கள், ஹோட்டல்கள், மதுபான கடைகள், விருந்தோம்பல் மற்றும் கேளிக்கை துறை நிறுவனங்கள் தடுப்புக்கு உரிய நடைமுறைகளை பின்பற்றி தங்களின் வழக்கமான நேரங்களில் செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது.
மேலும் தங்களின் அனைத்து ஊழியர்களும் முகக்கவசம் அணிவது மட்டுமல்லாது, மற்ற இரண்டு தவணை தடுப்பூசிகள் போட பெற்றிருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அனைத்து கல்வி நிறுவனங்களும் கோவிட் 19 தடுப்புக்குரிய நடைமுறைகளின் படி செயல்பட வேண்டும். மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் போது, அனைத்து மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் இதர ஊழியர்கள் கட்டாயம் முக கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும்.
அனைத்து தனியார் கடைகள் மற்றும் தொழில் நிறுவனங்களும் தங்களின் சராசரி நேரங்களில் செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் 100 சதவீதம் தடுப்பூசி போடப்பட்டுள்ளனர் என்று உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அனைத்து வழிபாட்டு தலங்களிலும், முன்பு பின்பற்றிய கோவிட் 19 தடுப்புக்குரிய நடைமுறைகளை, பின்பற்றி செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வல்லவன் அறிக்கை வெளியிட்டு அறிவித்துள்ளார்.
புதுச்சேரியை தொடர்ந்து தமிழகத்திலும், புதிய நடைமுறைகள் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- china corona
- china corona cases
- china corona news
- china corona update
- corona
- corona alert
- corona cases in china
- corona cases in india
- corona in china
- corona in india
- corona in pakistan
- corona new guidelines
- corona new variant found in gujrat
- corona new variant symptoms
- corona news
- corona update
- corona virus
- corona virus new guidelines india
- corona virus updates
- new corona variant in india
- new covid
- new covid variant
- new covid wave
- new year celebration
- theatres must in mask