Asianet News TamilAsianet News Tamil

இதென்ன புது கலாட்டா... மருதநாயகத்தையும் துவங்கப்போகிறாராம் கமல்’ பூஜாவே சொல்றாங்க!

‘தேவர் மகன்2’ செய்திகள் சூடுபிடித்துருக்கும் நிலையில், கமல் மிகவிரைவில் மருதநாயகம்’ படத்தையும் துவங்குவார். அதில் எனக்கு ஒரு நல்ல கேரக்டரும் கேட்டிருக்கிறேன்’ கமலின் லேட்டஸ்ட் ஆஸ்தான நாயகியான பூஜாகுமார்.

Marudhanayagam...pooja kumar-kamal haasan
Author
Chennai, First Published Oct 14, 2018, 10:24 AM IST

‘தேவர் மகன்2’ செய்திகள் சூடுபிடித்துருக்கும் நிலையில், கமல் மிகவிரைவில் மருதநாயகம்’ படத்தையும் துவங்குவார். அதில் எனக்கு ஒரு நல்ல கேரக்டரும் கேட்டிருக்கிறேன்’ கமலின் லேட்டஸ்ட் ஆஸ்தான நாயகியான பூஜாகுமார். Marudhanayagam...pooja kumar-kamal haasan

‘விஸ்வரூபம் படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகத்தில் நடித்தது மறக்க முடியாத அனுபவம். கிட்டத்தட்ட நான்காண்டு கால கடின உழைப்பிற்கு ரசிகர்கள் வெற்றி என்ற அங்கீகாரத்தை அளித்து படக்குழுவினரை மகிழ்ச்சியடைய வைத்தனர். இதனால் உற்சாகத்தில் திளைக்கிறேன். கமல்ஹாசனிடம் மருதநாயகத்தை எப்போது தொடங்கவிருக்கிறீர்கள்? என்று கேட்டிருக்கிறேன். அதற்கு அவர், ‘அது போன்ற படங்களுக்கு கடின உழைப்பு, நீண்ட கால தயாரிப்பு, முன் தயாரிப்பு, ஆய்வு பணிகள் என அதிக உழைப்பை கேட்கும். அதனால் அதற்கு காலம் தான் பதில் சொல்லும் ’ என்று என்னிடம் பகிர்ந்திருக்கிறார். ஆனால் அவர் மருதநாயகத்தை தொடங்கினால்.. வாய்ப்பு கிடைத்தால் அதில் நடிக்க தயாராகவேயிருக்கிறேன்.

 Marudhanayagam...pooja kumar-kamal haasan

தற்போது சரித்திர பின்னணியிலான படங்கள், பீரியட் படங்கள், சுயசரிதை திரைப்படங்கள் ஆகியவை வெளியாகி ரசிகர்களின் பேராதரவைப் பெற்று வருகின்றன. அந்த வகையில் மூத்த நடிகையான வைஜெயந்தி மாலா பாலி அவர்களின் வாழ்க்கை வரலாறு, ஹிந்தி நடிகை ரேகா அவர்களின் சுயசரிதை போன்றவை திரைப்படமாக உருவானால் அதில் கதையின் நாயகியாக நடிக்க ஆசைப்படுகிறேன். உத்தம வில்லன் படத்தில் சிறிய பகுதியில் இது போன்று நடித்திருக்கிறேன். ஆனாலும் முழு நீள சரித்திர பின்னணியிலான கதையில் குறிப்பாக வீரமங்கை ஜான்சி ராணியின் கதையில், நடிக்க விரும்புகிறேன். Marudhanayagam...pooja kumar-kamal haasan

திரையுலகில் பரபரப்பாக பேசப்படும் ‘மீடூ ’ ஹேஸ்டேக் என்ற இணையப்பதிவில் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல் தொடர்பான அனுபவத்தை பகிர்ந்துகொள்ளும் நடிகைகள் மற்றும் பிரபலங்களின் துணிச்சலை பாராட்டுகிறேன். இது சமூகத்தில் பெண்களைப் பற்றிய மதிப்பீடுகளை மாற்றியமைக்கவேண்டும் என்பதற்காக நேர்மறையான எண்ணத்துடன் தொடங்கப்பட்ட ஒரு முயற்சி. Marudhanayagam...pooja kumar-kamal haasanதற்போது நெட்பிளிக்ஸிற்காக பிரியதர்ஷன் இயக்கத்தில் ‘த இன்விஸிபிள் மாஸ்க் ’ என்ற ஹிந்தி படமொன்றில் நடித்து வருகிறேன். அடுத்து அவரது இயக்கத்தில் குஞ்சாலி மராக்கரின் சுயசரிதையில் முக்கியமான கேரக்டரில் நடிப்பதற்கான பேச்சு வார்த்தையும் நடைபெற்று வருகிறது. திரையுலகில் ஏராளமான இளம் படைப்பாளிகள் அறிமுகமாகி வீரியமான படைப்புகளை வழங்கி, மக்களின் ரசனையை மேம்படுத்தி வருகிறார்கள்.

எனக்கேற்ற கேரக்டர் இருந்து, திரைக்கதையும் என்னை ஆச்சரியப்படுத்தினால் அவர்களுடனும் இணைந்து பணியாற்ற தயாராகவேயிருக்கிறேன். ஆனால் கமல் எனக்கு ரொம்ப ரொம்ப ஸ்பெஷல் எனவே மற்ற எல்லா படங்களையும் விட மருதநாயகத்தையே அதிகம் எதிர்பார்க்கிறேன்’ என்கிறார் பூஜா.

Follow Us:
Download App:
  • android
  • ios