நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படும் நிலையில். இது குறித்து அவர் ஒன்றுமே வாய்திறக்க வில்லை, கமல், கௌதமி, ஸ்ரீபிரியா போன்றோர் தமிழக அரசியல் குறித்து தங்களது கருத்துக்களை வெளியிட்ட போதிலும் அமைதியாகவே இருந்தார் ரஜினிகாந்த்.
தற்போது அரசியல் எல்லாம் தற்போதைக்கு வேண்டாம் என்பதுபோல. அவர் நடித்து வரும் 2.0, ரஞ்சித்தின் அடுத்தப்படம் என பிஸியாக இருக்கின்றார்.
தற்போது மேலும் ரசிகர்களுக்கு விருந்து கொடுப்பது போல பாட்ஷா படத்தினை டிஜிட்டல் வெர்ஷன் மார்ச் 3ம் தேதி வெளிவருகிறது என அதிகாரப்பூர்வ தகவல் வெளிவந்துள்ளது.
இதனால், ரஜினி ரசிகர்கள் செம்ம உற்சாகத்தில் உள்ளனர், பல திரையரங்குகளில் இப்படத்தை திரையிட முடிவு செய்துள்ளார்கள். இதனால் 2.0 மற்றும் ரஞ்சித்தின் புதிய படங்களுக்கு முன்பே பாட்ஷா மூலம் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
