பொன்னியின் செல்வன் டீசர் வெளியீடு... விக்ரம் தரப்பில் இருந்து மாரடைப்பு செய்தியை மறுக்கப்படுகிறதா?

நடிகர் விக்ரமுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், ஆஞ்சியோ சிகிச்சைக்கு பிறகு அவர் நலமுடன் இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், அதற்க்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக... அவரது மேலாளர் விக்ரமுக்கு மாரடைப்பு ஏற்பட வில்லை என்றும், சாதாரண நெஞ்சுவலி மட்டுமே ஏற்பட்டதாக கூறியுள்ளார்.
 
Manager informed that Vikram did not have a heart attack

மேலும் செய்திகள்: விக்ரமுக்கு என்ன சிகிச்சை கொடுக்கப்பட்டது? தற்போதைய உடல்நிலை குறித்து வெளியான பரபரப்பு தகவல்!

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் விக்ரம், ஆதித்ய கரிகாலனாக நடித்துள்ள  பொன்னியின் செல்வன் பாகம் 1-யின் டீசர் வெளியீட்டு விழா இன்னும் சில மணி நேரங்களில் நடைபெற உள்ள நிலையில், திடீர் என இன்று (வெள்ளிக்கிழமை) நடிகர் விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி வெளியாகி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Manager informed that Vikram did not have a heart attack

இதுகுறித்து விக்ரமின் மேலாளர் சூரிய நாராயணன் கூறியுள்ளதாவது,  அதிக காய்ச்சல் காரணமாகவும் அசௌகரியம் காரணமாகவும், லேசான நெஞ்சுவலி காரணமாகவே விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், தற்போது அவரது உடல்நிலை நலமாக உள்ளதாகவும், விக்ரமுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுவதில்  உண்மை இல்லை என்பது போல் தெரிவித்துள்ளார். அதே நேரம் இன்று, 'பொன்னியின் செல்வன்' டீசர் வெளியாக உள்ள நிலையில், மாரடைப்பு செய்தி மறுக்கப்படுகிறதா? என நெட்டிசன்கள் சிலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்: கையில் ஆயுதம் ஏந்திய போர் வீரனாய் ஜெயம் ரவி..! 'பொன்னியின் செல்வன்-1' அருண்மொழி வர்மன் லுக் வெளியானது!
 
Manager informed that Vikram did not have a heart attack

மேலும் செய்திகள்: எந்த நடிகைக்கு வரும் இப்படி ஒரு துணிச்சல்? ஆண்ரியாவின் முயற்சியை கண்டு வாயடைத்து போன ரசிகர்கள்!! வைரல் வீடியோ.

இந்த வருடம் நடிகர் விக்ரம் நடிப்பில் இரண்டு பெரிய படங்கள் வெளியாக உள்ளது. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நீண்ட கால காத்திருப்புக்கு பின்னர் வெளியாக உள்ள 'கோப்ரா' திரைப்படம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி திரைக்கு வரும் நிலையில், மற்றொரு பிரமாண்ட படமான 'பொன்னியின் செல்வன்' பாகம் 1 திரைப்படம் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாக உள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios