கையில் ஆயுதம் ஏந்திய போர் வீரனாய் ஜெயம் ரவி..! 'பொன்னியின் செல்வன்-1' அருண்மொழி வர்மன் லுக் வெளியானது!
நடிகை திரிஷாவின் கேரக்டர் போஸ்டரை நேற்று படக்குழு வெளியிட்ட நிலையில், தற்போது அருண்மொழி வர்மனாக நடித்துள்ள ஜெயம் ரவியின் கேரக்டர் போஸ்டர் வெளியாகியுள்ளது.
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக, அதீத பொருட்செலவில் உருவாகி உள்ள படம் பொன்னியின் செல்வன். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தை, 5 மொழியில் தமிழ், தெலுங்கு, இந்தி, உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியிட உள்ளனர்.
செப்டம்பர் மாதம் 30-ந் தேதி 'பொன்னியின் செல்வன்' பாகம் -1 வெளியாக உள்ள நிலையில், படத்தின் புரோமோஷன் பணிகளை படக்குழு இப்போதே துவங்கிவிட்டது.
மேலும் செய்திகள்: அதிரடி... சரவெடி.. இன்று முதல் ஓடிடியில் ஒளிபரப்பாகும் கமல்ஹாசனின் 'விக்ரம்' !!
அந்த வகையில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ள முக்கிய நடிகர்களின் கேரக்டர் போஸ்டர்கள் தினம் தோறும் வெளியாகி வருகிறது.
ஏற்கனவே, வந்திய தேவனாக நடித்துள்ள கார்த்தியின் போஸ்டர், ஆதித்ய கரிகாலனாக நடித்துள்ள விக்ரமின் போஸ்டர், நந்தினியாக நடித்துள்ள ஐஸ்வர்யா ராய்யின் போஸ்டர் மற்றும் குந்தவையாக நடித்துள்ள திரிஷாவின் போஸ்டர்கள் வெளியாகின.
மேலும் செய்திகள்: எந்த நடிகைக்கு வரும் இப்படி ஒரு துணிச்சல்? ஆண்ரியாவின் முயற்சியை கண்டு வாயடைத்து போன ரசிகர்கள்!! வைரல் வீடியோ.
இதை தொடர்ந்து, தற்போது அருண்மொழி வர்மன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஜெயம் ரவியின் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில் கையில் ஈட்டியை ஏந்தியபடி, போர் வீரனாக உள்ளார்.
மேலும் இந்த போஸ்டரில் இன்று மாலை 6 மணிக்கு 'பொன்னியின் செல்வன்' பாகம் 1-ன் டீசர் வெளியாக உள்ளதையும் படக்குழு அறிவித்துள்ளது. சென்னை ட்ரேட் சென்டரில் 'பொன்னியின் செல்வன்' டீசர் வெளியீட்டு விழா இன்று மாலை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்: கவர்ச்சி காட்டுவதில் அக்கா யாஷிகாவுக்கே டஃப் கொடுக்கும் ஒஷீன்..! ப்பா... அதுக்குன்னு இப்படியா?