தமிழில் விண்ணைத்தாண்டி வருவாயா, ராஜா ராணி, நண்பேன்டா, விஜய்யின் தெறி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பிரபல மலையாள நடிகர் கோட்டயம் பிரதீப் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

பிரபல மலையாள நடிகர் கோட்டயம் பிரதீப் (Kottayam Pradeep) இன்று காலமானார். அவருக்கு வயது 61. இன்று அதிகாலை 4.30 மணி அளவில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவரது உயிர் பிரிந்தது. இவர் தமிழில் விண்ணைத்தாண்டி வருவாயா, ராஜா ராணி, நண்பேன்டா, விஜய்யின் தெறி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

மம்மூட்டி, மோகன்லால், பிரித்விராஜ், திலீப், உள்ளிட்ட முன்னணி மலையாள நடிகர்களின் படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கோட்டயம் பிரதீப் (Kottayam Pradeep). இவரது திடீர் மறைவு ரசிகர்களையும், திரையுலக பிரபலங்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

மலையாள திரையுலகில் 20 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வருகிறார் பிரதீப். இவருக்கு மாயா என்கிற மனைவியும், இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். கோட்டயம் பிரதீப்பின் மறைவுக்கு சினிமா நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் ஆகியோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்.... Actress Megha Akash : ஸ்டைலாக தம் அடிக்கும் மேகா ஆகாஷ்.... போட்டோ பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்