- Home
- Cinema
- Actress Megha Akash : ஸ்டைலாக தம் அடிக்கும் மேகா ஆகாஷ்.... போட்டோ பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்
Actress Megha Akash : ஸ்டைலாக தம் அடிக்கும் மேகா ஆகாஷ்.... போட்டோ பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்
தமிழ் மற்றும் தெலுங்கில் தலா இரண்டு படங்களை கைவசம் வைத்துள்ள நடிகை மேகா ஆகாஷ், தற்போது புதிதாக தயாரிப்பு நிறூவனம் ஒன்றை தொடங்கி உள்ளார்.

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் இயக்குனர் பாலாஜி தரணிதரன் இயக்கிய ‘ஒரு பக்க கதை’ படத்தின் மூலம் ஹீரோயின் வாய்ப்பை பெற்றவர் மேகா ஆகாஷ் (Megha Akash). இப்படம் முடங்கிப்போனதால், கவுதம் மேனனின் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார் மேகா ஆகாஷ். இப்படமும் நீண்ட நாட்களாக ரிலீசாகாததால், ரஜினியின் பேட்ட (Petta) படம் தான் இவருக்கு அறிமுக படமாக அமைந்தது.
இதையடுத்து சுந்தர் சி இயக்கத்தில் வெளியான வந்தா ராஜாவா வருவேன் படத்தில் சிம்புவுக்கு (Simbu) ஜோடியாக நடித்திருந்தார் மேகா ஆகாஷ். பேட்ட, வந்தா ராஜாவா வருவேன் போன்ற படங்கள் ரிலீசான பின்னர் தான் அவர் முதலாவதாக நடித்த ஒரு பக்க கதை, எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்கள் வெளிவந்தன.
இதையடுத்து தமிழில் பட வாய்ப்புகள் சரிவர கிடைக்காததால் தெலுங்கு பக்கம் ஒதுங்கினார் மேகா ஆகாஷ் (Megha Akash). இதுதவிர இந்தியிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். தற்போது தமிழில் நடிகை மேகா ஆகாஷ் கைவசம் விஜய் சேதுபதியின் யாதும் ஊரே யாவரும் கேளிர், விஜய் ஆண்டனியின் ‘மழை பிடிக்காத மனிதன்’ ஆகிய படங்கள் உள்ளது.
இதுதவிர தெலுங்கில் இரண்டு படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்த நிலையில் நடிகை மேகா ஆகாஷ் (Megha Akash), புதிதாக தயாரிப்பு நிறூவனம் ஒன்றை தொடங்கி உள்ளார். அந்நிறுவனம் தயாரிக்கும் முதல் படத்தில் அவரே ஹீரோயினாகவும் நடிக்கிறார். அண்மையில் வெளியான இந்த படத்தின் போஸ்டரில் நடிகை மேகா ஆகாஷ் ஸ்டைலாக சிகரெட் பிடிப்பது போன்ற ஸ்டில் இடம்பெற்று இருந்தது.
இந்த புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள், முதல் படமே இப்படியா என கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர். இந்த படத்தை இயக்குனர் சுஷாந்த் ரெட்டியின் உதவியாளர் அபிமன்யு ரெட்டி (Abhimanyu reddy) இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... Valimai Movie : ரிலீசுக்கு முன்பே வசூலில் வாகைசூடிய வலிமை!! யம்மாடியோ... இத்தனை கோடியா?