MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Valimai Movie : ரிலீசுக்கு முன்பே வசூலில் வாகைசூடிய வலிமை!! யம்மாடியோ... இத்தனை கோடியா?

Valimai Movie : ரிலீசுக்கு முன்பே வசூலில் வாகைசூடிய வலிமை!! யம்மாடியோ... இத்தனை கோடியா?

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி உள்ள வலிமை படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால் இப்படத்தின் வியாபாரமும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

1 Min read
Author : Ganesh A | Asianet News
Published : Feb 15 2022, 08:22 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

அஜித் நடிப்பில் ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகி உள்ளது வலிமை (Valimai). இப்படத்தை சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை போன்ற ஹிட் படங்களை இயக்கிய எச்.வினோத் இயக்கி உள்ளார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், 'நேர்கொண்ட பார்வை' படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக அவர் அஜித்துடன் இணைந்து உள்ளார்.

24

கடந்த 2019-ம் ஆண்டே தொடங்கப்பட்ட இப்படம் இரண்டு ஆண்டுகள் கடின உழைப்புக்கு பின் தற்போது ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இப்படம் வருகிற பிப்ரவரி 24-ந் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும் (Huma Qureshi), வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அஜித்தின் தாயாக ஜெயசுதா நடித்துள்ளார்.

34

நீரவ் ஷா ஒளிப்பதிவாளராகவும், திலீப் சுப்பராயன் ஸ்டண்ட் மாஸ்டராகவும் பணியாற்றி உள்ளனர். இப்படத்திற்கு ஜிப்ரான் (Ghibran) மற்றும் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளனர். அஜித் இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக அர்ஜுனன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இது தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளில் வெளியாக உள்ளது. ரிலீஸ் நெருங்கி வருவதால் இப்படத்தின் வியாபாரமும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

44

அதன்படி வலிமை (Valimai) திரைப்படம் ரிலீசுக்கு முன்பே ரூ.300 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சாட்டிலைட் உரிமை, ஓடிடி உரிமை, டப்பிங் உரிமை, திரையரங்க உரிமை, வெளிநாட்டு உரிமை ஆகியவை நல்ல விலைக்கு விற்கப்பட்டதால், ரிலீசுக்கு முன்வே வலிமை படம் மிகப்பெரிய தொகை வசூலித்து கல்லா கட்டி உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
OTTயில் மிஸ் பண்ணாம பார்க்க வேண்டிய டாப் 5 தமிழ் கேங்ஸ்டர் மூவீஸ் இதோ
Recommended image2
ராகவ்வை கதற கதற அடித்த சோழன்... நிலாவிற்கு காத்திருந்த பேரதிர்ச்சி - அய்யனார் துணை சீரியல் அப்டேட்
Recommended image3
சிந்தாமணியால் சிக்கப்போகும் ரோகிணி... ஸ்ருதிக்கு வந்த டவுட் - சிறகடிக்க ஆசை சீரியலில் செம ட்விஸ்ட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved