பிரபல மலையாள நடிகர் தன்னிடம் அத்துமீறி நடந்து கொண்டார். தன்னை யாரும் தட்டிக்கேட்க முடியாது என்ற அகங்காரத்தில் எனது மார்பகங்களைப் பிடித்து கசக்கினார்’ என்று துவக்கத்தில் பெயரை வெளியிடாமல் பதிவுகள் எழுதிவந்த மலையாள நடிகை தனது கண்ணாமூச்சி ஆட்டத்தை முடித்துக்கொண்டு உண்மையை பகிரங்கமாக போட்டு உடைத்தார். 

அந்த நடிகையின் பெயர் திவ்யா கோபிநாத். அவரிடம் அத்துமீறி ஆபாச ஆட்டம் ஆடியவர் மூத்த நடிகர் அலென்சியர். ‘முதலில் என் பெயரை வெளியிடாமல் நான் ரகஸியம் காத்ததற்கு காரணம் என் பெற்றோரிடமிருந்த பயம். ஒரு கட்டத்தில் அவர்களிடம் உண்மையை உடைத்தபோது, ‘நீ பயப்படாதே மோளே அந்த சாத்தானை அம்பலப்படுத்து என்று தைரியம் தந்தார்கள்.

இன்னொரு பக்கம் இந்த அலென்சியர் சமூக அக்கறை கொண்டவர் என்கிற இமேஜ் மக்கள் மத்தியில் இருப்பதாலும் எனக்கு நாம் சொல்வதை நம்புவார்களா என்ற பயமும் இருந்தது. ஏனென்றால் நாட்டில் ஒரு பிரச்சினை என்றால் இவர்தான் முதல் ஆளாக குரல் எழுப்புவார். 

 பின்னர் மெல்ல சக நடிகைகளிடம் பேசிப் பார்த்தபோது, அவர் பலரிடமும் காம விளையாட்டுகள் விளையாடிருப்பது தெரிந்தது. எனவே துணிந்து களத்தில் இறங்கினேன்..அலென்சியருடன் 4 படத்தில் நடித்திருக்கிறேன். அவை அத்தனையிலும் எனக்கு செக்ஸ் தொல்லை கொடுத்தார் அவர்’என்கிறார் திவ்யா கோபிநாத். படிக்கிறது ராமாயணம். இடிக்கிறது கூட நடிக்கிற பொண்ணுங்களையா மிஸ்டர் அலென்சியர்?