சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'பேட்ட' படத்தின் மூலம் தமிழில் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். தற்போது அவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் ‘மாஸ்டர்’ படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார்.இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்னும் அதிகாரப்பூர்வ தேதி அறிவிக்கப்படவில்லை. 

தளபதி விஜய்யுடன் “மாஸ்டர்” படத்தில் நடிக்க ஆரம்பித்ததில் இருந்தே மாளவிகா மோகனன் சோசியல் மீடியா குயினாக மாறிவிட்டார். ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் படுபிசியாக இருக்கும் மாளவிகா, செம்ம கிளாமர் லுக்கில் வெளியிடும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகி வருகிறது.  ஓவராக கவர்ச்சி காட்டி மாளவிகா மோகனன் பதிவிடும் புகைப்படங்களை தளபதி ரசிகர்கள் போட்டி, போட்டுக்கொண்டு வைரலாக்கி வருகின்றனர். 

இதையும் படிங்க: டாப் ஆங்கிளில் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த யாஷிகா ஆனந்த்... படு பயங்கர ஓபனால் நிலைகுலைந்த நெட்டிசன்கள்...!

இந்நிலையில் விஜய் ரசிகர் ஒருவர் சோசியல் மீடியாவில் ஷேர் செய்த கார்ட்டூனை பார்த்த மாளவிகா மோகனன் செம்ம கடுப்பாகி தாறுமாறாக திட்டி தீர்த்துவிட்டார்.“மாஸ்டர்” டீமைச் சேர்ந்த அனிரூத், விஜய், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டோர் எல்லாம் லாக்டவுன் காரணமாக ஒரே வீட்டில் இருப்பது போன்றும், மாளவிகா மோகானன் அவர்களுக்கு சமையல் செய்வது போன்றும் கார்ட்டூன்கள் இடம் பெற்றுள்ளது. 

இதையும் படிங்க: சத்தமே இல்லாமல் நடந்து முடிந்த ஆபாச நடிகையின் திருமணம்... அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்...!

இதை பார்த்து கொதித்து போன மாளவிகா மோகனன், ஒரு மூவி வீட்டில் கூட பெண்கள் சமையல் வேலை மட்டும் தான் செய்யனுமா? இப்படி பெண்கள் இந்த வேலைகளை மட்டும் தான் செய்ய வேண்டும் என்று சொல்லும் முறை எப்போது சாகும் என்று கடுப்பாக பதிவிட்டார். ஆனால் என்ன நினைத்தாரோ தெரியவில்லை சிறிது நேரத்திலேயே அந்த ட்வீட்டை நீக்கிவிட்டார். ஆனால் மாளவிகா மோகனின் பதிவிட்ட ட்வீட்டின் ஸ்கீரின் ஷாட் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.