உலகம் முழுவதும் விஸ்வரூபம் எடுத்து வரும் கொரோனா பிரச்சனையால் இந்தியாவில் மே 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் முதலே அனைத்து விதமான சினிமா ஷூட்டிங்கும் நிறுத்தப்பட்டுள்ளதால் தமிழ் திரையுலகில் மட்டும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெப்சி தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இதையடுத்து தமிழ் தயாரிப்பாளர்கள் மற்றும் பெப்சி சங்கத்தினர் வைத்த கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு போஸ்ட் புரோடக்‌ஷன் மற்றும் சீரியல் படப்பிடிப்புகளை நடத்த அனுமதி அளித்தது. 

இதையும் படிங்க: இந்த நடிகையால் மட்டும் எப்படி?... புடவையில் கூட தினுசு, தினுசாக கவர்ச்சி காட்டும் அர்ச்சனா குப்தா!

கொரோனா பிரச்சனை தீவிரம் அடைந்து வரும் இந்த சமயத்தில் தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும் என்று தெரியவில்லை. அப்படி தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் படம் பார்க்க முன்பு போல கூட்டம் வருமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. இந்நிலையில் அழிவை நோக்கி நகரும் தமிழ் சினிமாவை காப்பதற்காக புதிய வழியை கண்டுபிடித்துள்ளனர். 

இதையும் படிங்க: மீண்டும் வெளியானது ஆன்ட்ரியா லிப் லாக் காட்சி.... தீயாய் பரவும் வீடியோ...!

திரைப்பட விநியோகஸ்தரும், திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவருமான திருப்பூர் சுப்பிரமணியம் மற்றும் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் ஆர்.பி.செளத்ரி ஆகியோர் ஒன்றிணைந்து புது முயற்சியை கையில் எடுத்துள்ளனர். சுமார் 2 கோடி ரூபாய் பட்ஜெட்டில் புதிய படம் ஒன்றை தயாரிக்க திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தில் நடிக்க உள்ள நடிகர்க, நடிகைகள் மற்றும் டெக்னீஷியன்கள் உட்பட யாருக்கும் சம்பளம் நிர்ணயிக்கப்படவில்லை. 

இதையும் படிங்க: டிரஸ் போட்டிருக்கீங்களா?... பிரபல தொகுப்பாளினி டிடி-யின் போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்...!

கே.எஸ். ரவிக்குமார் இயக்க உள்ள இந்த படத்தில் சத்யராஜ், விஜய் சேதுபதி, பார்த்திபன் ஆகியோர் நடிக்க உள்ளனர். 30 நாட்களுக்கு ஷூட்டிங், 30 நாட்களுக்கு போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் என அனைத்தையும் வெற்றிகரமாக முடித்து, நேரடியாக தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய உள்ளனர். அதன் மூலம் கிடைக்கும் லாபத்தை பொறுத்தே நடிகர், நடிகைகள் உள்ளிட்டோருக்கு சம்பளம் வழங்கப்பட உள்ளது. இந்த புதிய முயற்சி மட்டும் வெற்றி பெற்றால் நஷ்டத்தில் தவிக்கும் பல தயாரிப்பாளர்களுக்கு சிறந்த வழியாக அமையும்.