டிரெண்டில் இணைந்த உலகநாயகன்... டுவிட்டரில் அந்த ஒரு வார்த்தையால் உள்ளத்தை அள்ளிய கமல்ஹாசன்
Kamalhaasan : நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் டுவிட்டரில் பதிவிட்ட அந்த ஒரு வார்த்தையால் மக்களின் உள்ளத்தை கவர்ந்துள்ளார்.
உலகம் முழுவதும் பேமஸ் ஆன சமூக வலைதளங்களில் ஒன்று டுவிட்டர். உலக நிகழ்வுகள் முதல் உள்ளூர் நிகழ்வுகள் வரை இதில் வைரலானது என்றால் அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், டுவிட்டரில் தற்போது ஒரு வார்த்தை டுவிட் என்பது டிரெண்டிங்கில் உள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொடங்கி வைத்த இந்த டிரெண்ட் தற்போது உலகம் முழுவதும் பரவி உள்ளது.
இந்த ஒரு வார்த்தை டுவிட்டை தமிழ்நாட்டில் பிரபலமாக்கியது அரசியல் கட்சிகள் தான். முதலில் அதிமுக தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் எடப்பாடியார் என பதிவிட, அதற்கு போட்டியாக பல்வேறு அரசியல் கட்சிகளும் இந்த டிரெண்டில் இணைந்துவிட்டன. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திராவிடம் என பதிவிட்டு இந்த டிரெண்டில் இணைந்தார்.
இதையும் படியுங்கள்... அமெரிக்க ஜனாதிபதிக்கே சவால் விட்ட அதிமுக.. அந்த ஒரு வார்த்தை “எடப்பாடியார்” தான் காரணம் !
அதேபோல் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தமிழ் தேசியம் என்றும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழன் என்று பதிவிட தற்போது புதிதாக இந்த டிரெண்டில் இணைந்திருக்கிறார் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் மக்கள் என பதிவிட்டு இருக்கிறார்.
அவரின் இந்த டுவிட் வைரலாகி வருகிறது. இதற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக ஏராளமானோர் லைக்குகளை போட்டு வந்தாலும், மறுபுறம் சிலர் விமர்சித்தும் வருகின்றனர். கமல்ஹாசன் பதிவிட்ட மக்கள் என்பதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ‘அடிக்கடி அவர்களை சந்திக்க வேண்டும்’ என நெட்டிசன்கள் சிலர் கமெண்ட் செய்து உள்ளனர்.
இதையும் படியுங்கள்... ட்விட்டரில் ‘அந்த’ ஒரு வார்த்தையை பகிர்ந்த ஸ்டாலின்.. திராவிடம் Vs தமிழ்தேசியம்? ட்விட்டரில் வைரல் சம்பவம் !