ட்விட்டரில் ‘அந்த’ ஒரு வார்த்தையை பகிர்ந்த ஸ்டாலின்.. திராவிடம் Vs தமிழ்தேசியம்? ட்விட்டரில் வைரல் சம்பவம் !
ட்விட்டரில் தற்போது ஒரு வார்த்தை பதிவு வைரலாகி வருகிறது.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் இன்று ட்விட்டரில் 'ஜனநாயகம்' இதனை ஆங்கிலத்தில் ‘democracy’ என்று பதிவிட்டார். உடனே நாசாவின் ட்விட்டர் பக்கத்தில் இருந்து, ‘universe’ என்று பதிவிட ட்விட்டரில் ஒரு வார்த்தை ட்வீட் வைரலானது. உலகின் பெரிய தலைவர்கள் முதல் பிரபலங்கள் வரை இந்த ஒரு வார்த்தை ட்வீட் போட்டு வருகிறார்கள். நம் இந்தியாவை சேர்ந்தவரும், கிரிக்கெட்டின் மாஸ்டர் பிளாஸ்டர் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் இந்தியாவில் தொடக்கி வைத்தார்.
மேலும் செய்திகளுக்கு..உங்களுக்கு பெண் குழந்தை இருக்கா? அப்போ..! சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தை தெரிஞ்சுக்கோங்க
அவர் ‘cricket’ என்று பதிவிட, இதனை பார்த்த ரசிகர்கள் ஒரு வார்த்தை ட்வீட்டை மேலும் பிரபலப்படுத்த தொடங்கினர். இதனால் குஷியடைந்த நெட்டிசன்கள் அவரவர்கள் தங்களது விருப்பத்திக்கேற்ப பல்வேறு பெயர்களை பதிவிட்டு வருகிறார்கள். அதிமுக அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ‘எடப்பாடியார்’ என்று பதிவிட, தாங்களும் தங்கள் பங்குக்கு திமுக, நாம் தமிழர் என பல்வேறு கட்சி தலைவர்களும் பல்வேறு வார்த்தைகளை பதிவிட்டு வருகிறார்கள்.
மேலும் செய்திகளுக்கு..அமெரிக்க ஜனாதிபதிக்கே சவால் விட்ட அதிமுக.. அந்த ஒரு வார்த்தை “எடப்பாடியார்” தான் காரணம் !
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், திராவிடம் என்றும், நாம் தமிழர் கட்சி வெளியிட்டுள்ள பதிவில், தமிழ் என்றும், சீமான் வெளியிட்டுள்ள பதிவில் தமிழ்த்தேசியம் என்று பதிவிட மாறி மாறி கமெண்ட்டுகளில் புகழ்ந்தும், திட்டித்தீர்த்தும் வருகிறார்கள். அதேபோல தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில் தமிழன் என்றும் பதிவிட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு..செப்டம்பர் 8 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !