பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது இணைபிரியாத தோழிகளாக மாறிவிட்ட ஐஸ்வர்யா தத்தா மற்றும் யாஷிகா ஆகிய இருவரும் தொடர்ந்து புதிய திரைப்படங்களில் கமிட் ஆகி வருகிறார்கள்.  

பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது இணைபிரியாத தோழிகளாக மாறிவிட்ட ஐஸ்வர்யா தத்தா மற்றும் யாஷிகா ஆகிய இருவரும் தொடர்ந்து புதிய திரைப்படங்களில் கமிட் ஆகி வருகிறார்கள். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்நிலையில் ஏற்கனவே மஹத் நடிக்க உள்ள புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க நடிகை ஐஸ்வர்யா கமிட் ஆகியுள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் பிரபுராம் இயக்க உள்ளதாகவும் காமெடி... ரொமான்ஸ்... கலந்த படமாக இது இருக்கும் என அதிகார பூர்வ தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில் இயக்குனர் கண்ணனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த வெங்கடேஷ் என்பவர் இயக்கவுள்ள படத்தில் மஹத் நடிக்கவுள்ளதாகவும் அவருக்கு ஜோடியாக நடிகை யாஷிகா ஆனந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின்போதே இருவரும் தாங்கள் காதலித்து வருவதாக வெளிப்படையாக கூறிய நிலையில், இருவரும் திரையில் இணைந்துள்ளதால் இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்படும் என கருதப்படுகிறது.

மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்க உள்ளதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி மாதம் சென்னை மற்றும் பெங்களூரில் நடைபெறும் என தெரிகிறது.

இந்த தகவல் வெளியானதில் இருந்து, பிராச்சியை விட்டு பிரிந்ததும்... மஹத், ஒரே நேரத்தில் தோழிகளாக இருக்கும் யாஷிகா மற்றும் மஹத்துடன் ரொமான்ஸ் செய்ய உள்ளார் என நெட்டிசன்கள் காலத்து வருகிறார்கள்.