பத்தாயிரம் தீக்குச்சிகளால் நடிகர் விஜய்யின் உருவப்படத்தை வரைந்து தளபதியை ‘தீ’ தளபதி ஆக்கி மாஸ் காட்டிய ரசிகர்

வாரிசு படத்தில் தீ தளபதி என்கிற பாடல் ஒன்று இடம்பெற்று இருக்கும் அதற்கு ஏற்றார் போல் தீயிலேயே தளபதியின் முகத்தை வரவைத்து மாஸ் காட்டி உள்ள சிராஜுதீனின் செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Madurai vijay fan draw vijay face using match stick viral video

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் அவர் நடித்துள்ள வாரிசு திரைப்படம் நாளை காலை வெளியாக உள்ளது. இதற்காக ரிலீஸ் பணிகள் ஒருபக்கம் மும்முரமாக நடைபெற்று வர, மறுபுறம் அவரது ரசிகர்கள் பல்வேறு விதமாக படத்திற்கு விளம்பரம் செய்து வருகின்றனர். அந்த வகையில் மதுரையை சேர்ந்த விஜய் ரசிகர் ஒருவர் செய்துள்ள விளம்பரம் தான் தற்போது பேசு பொருள் ஆகி உள்ளது.

மதுரையை சிராஜுதீன் என்பவர் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர் ஆவார். இவர் பத்தாயிரம் தீக்குச்சிகளால் நடிகர் விஜயின் உருவப்படத்தை வரைந்து அந்த தீக்குச்சிகளில் தீப்பற்ற வைத்து தீயில் நடிகர் விஜயின் முகம் தெரிகிற வகையில் உருவாக்கி அதனை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்... சபரிமலையில் அட்ராசிட்டி செய்த அஜித், விஜய் ரசிகர்கள்... அதிரடி உத்தரவு பிறப்பித்த கேரள உயர்நீதிமன்றம்

                                             

வாரிசு படத்தில் தீ தளபதி என்கிற பாடல் ஒன்று இடம்பெற்று இருக்கும் அதற்கு ஏற்றார் போல் தீயிலேயே தளபதியின் முகத்தை வரவைத்து மாஸ் காட்டி உள்ள சிராஜுதீனின் செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. நடிகர் விஜய்யே பெருமிதம் கொள்ளும் வகையில் அவரது செயல் இருந்துள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

6 மணி நேரம் செலவிட்டு இதனை செய்து சாதனை படைத்துள்ளார் சிராஜுதீன். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வாரிசு படத்தை வம்சி இயக்கி உள்ளார். தில் ராஜு தயாரித்துள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்திருக்கிறார். தமன் இசையமைத்துள்ள இப்படம் நாளை முதல் பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்ப உள்ளது.

இதையும் படியுங்கள்... மயோசிடிஸ் நோயால் அழகெல்லாம் போச்சேனு கிண்டலடித்தவருக்கு... Thug Life பதில் அளித்து தரமான பதிலடி கொடுத்த சமந்தா

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios