Madhurai vijay fans started their celebration for thalapathi vijay entry

தளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் தேனாண்டாள் நிறுவனம் தயாரித்துள்ள மெர்சல் படம் உலகம் முழுவதும் தீபாவளி சரவெடியாக வெளிவர உள்ளது. இந்த படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ரசிகர்களும் பேனர், போஸ்டர் என அமர்களப்படுத்தி வருகின்றனர்.

ஏற்கனவே டைட்டில் பிரச்சனை, கேளிக்கை வரி பிரச்சனை என சிக்கி சின்னாபின்னமான நிலையில் விஜயின் அரசியல் பிரவேசம் குறித்து பல்வேறு பன்ச் வசனத்தோடு பேனர் கட்டவுட் வைத்துள்ளனர் மதுரை ரசிகர்கள்.

மெர்சல் டீசரில் 'இளைய தளபதி' என்ற அடைமொழிக்கு பதிலாக 'தளபதி' விஜய் எனும் அடைமொழியுடன் வந்தது. இது இந்திய அரசியலை பேசப்போகும் படமாக இருக்கும் என யூகிக்கப்பட்டது.

"நீ பற்ற வைத்த நெருப்பு ஒன்று பற்றி எரிய உன்னைக் கேட்கும். நீ விதைத்த வினையெல்லாம் உன்னை அறுக்க காத்திருக்கும்" என அதே டீசரில் விஜய் பேசுவதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு நிலவியது.

தமிழக அரசியலில் அனல் பறக்கும் சூழ்நிலையில் 'ஆளப்போறான் தமிழன்' பாடலும் விஜய் அரசியலுக்கு வர அடித்தளமிட்டுள்ளார் என்ற விமர்சனங்கள் வெளியானது. 

இந்த விமர்சனம் மட்டும் பத்தாது எங்கள் இளையதளபதியே தளபதி என தனது அடைமொழியை மாற்றிவிட்டார். நாங்களும் இப்போது களத்தில் குதித்துவிட்டோம் என மதுரையை சேர்ந்த ரசிகர்கள் மெர்சல் போஸ்டர் ஒன்றை தயாரித்து வெளியிட்டுள்ளனர். அதில் "சட்டமன்றம் ஏங்குகிறது, பாராளுமன்றம் பதறுகிறது" என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. இதனால் இந்த போஸ்டர் அந்த பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.