தமிழ் சினிமாவில் நீண்ட இடைவேளைக்கு பிறகு 'இறுதிசுற்று' திரைப்படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்தவர் நடிகர் மாதவன். தற்போது கதைக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்துவருகிறார், அந்த வரிசையில் இவர் நடிகர் விஜய்சேதுபதியுடன் இணைந்து நடித்து கடந்த மாதம் வெளிவந்த 'விக்ரம் வேதா' திரைப்படம் மிக பெரிய ஹிட் கொடுத்தது என்பது அனைவரும் அறிந்ததுதான்.

இந்நிலையில் தற்போது மாதவன் அவருடைய குடும்பத்துடன் மும்பையில் வசித்து வருகிறார்.  மும்பையில் தற்போது இடைவிடாது பெய்து வரும் தொடர் மழை காரணமாக சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது இதனால் பல கார்கள், பைக்குகள் சாலையில் ரிப்பேர் ஆகி நின்றுவிடும் நிலை உருவாகியுள்ளது.

இது போல் நடிகர் மாதவன் முக்கிய வேலை ஒன்றிற்காக வெளியே சென்ற போது மாதவனின் கார் ரிப்பேர் ஆகி நடு ரோட்டில் நின்றுவிட்டதாம். இதனால் நான் எப்படி வீட்டிற்கு போவேன் என தெரியவில்லை என தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மாதவன் பதிவிட்டுள்ளார்.