பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய்பல்லவி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் "மாரி 2". இதில் வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர், கிருஷ்ணா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான "ரவுடி பேபி" பாடல் ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றது.  நடனப்புயல் பிரபு தேவா நடன பயிற்சியில் தனுஷ், சாய் பல்லவி போட்ட துள்ளல் ஆட்டம் பட்டி, தொட்டி முதல் அனைவரையும் ஈர்த்தது.  இசை, நடனம், செட் அமைப்பு என அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 

 

இதையும் படிங்க: டாக்டர் ராஜசேகர் உடல் நிலை எப்படி உள்ளது?... மனைவி ஜீவிதா வெளியிட்ட உருக்கமான தகவல்...!

அனிரூத் இசையில் "மாரி" படத்தின் பாடல்கள் செம்ம ஹிட்டான நிலையில், இரண்டாம் பாகத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. முதல் பாகம் அளவுக்கு 2ம் பாகத்தின் பாடல்கள் இருக்குமா? என ரசிகர்கள் புலம்பி வந்த சமயத்தில் "ரவுடி பேபி" என்ற ஒரே ஒரு பாடல் "மாரி 2" படத்திற்கான ஒட்டுமொத்த புரோமோஷனாக மாறியது. யுவன் சங்கர் ராஜா இசையில் தனுஷ் எழுதி பாடிய இந்த பாடலை யூ-டியூப் மூலமாக இதுவரை 990 மில்லியன் பார்வையாளர்கள் கண்டு ரசித்துள்ளனர். தென்னிந்திய மொழிகளிலேயே அதிக பார்வையாளர்களை பெற்ற ஒரே பாடல் என்ற சாதனையை ரவுடி பேபி பாடல் பெற்றுள்ளது. 

 

இதையும் படிங்க: காதல் கணவருக்கு லிப் லாக்... படு ரொமான்ஸ் போட்டோவை வெளியிட்ட காஜல் அகர்வால்...!

மேலும் தென்னிந்திய பாடல் 1பில்லியன் அதாவது 100 கோடி பேரால் கண்டு ரசிக்கப்பட்டது என்ற சாதனையும் விரைவில் ரவுடி பேபி படைக்க உள்ளது. இன்னும் 10 மில்லியன் பேர், அதாவது இன்னும் 1 கோடி பேர் இந்த பாடலை யூ-டியூப்பில் கண்டுவிட்டால் போதும் அந்த உச்சத்தை இந்த பாடல் விரைவில் தொட்டுவிடும். இன்னும் 10 நாட்களில் அந்த சாதனையை படைத்து தீபாவளிக்கு தனுஷ் ரசிகர்களை திக்குமுக்காட வைக்கும் என அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.