டாக்டர் ராஜசேகர் உடல் நிலை எப்படி உள்ளது?... மனைவி ஜீவிதா வெளியிட்ட உருக்கமான தகவல்...!
இதனிடையே ராஜசேகர் உடல் நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன

தெலுங்கு திரையுலகில் அதிரடி ஆக்ஷன் படங்களில் நடித்து புகழ் பெற்றவர் டாக்டர் ராஜசேகர். தமிழில் புதுமைப்பெண், புதிய தீர்ப்புகள், மீசைக்காரன், மன்னிக்க வேண்டுகிறேன் உள்பட சில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் அப்போது பிரபல நடிகையாக இருந்த ஜீவிதாவை திருமணம் செய்துகொண்டார். டாக்டர் ராஜசேகர் - ஜீவிதா தம்பதிக்கு ஷிவானி, ஷிவாத்மிகா என இரு மகள்கள் உள்ளனர்.

கடந்த அக்டோபர் மாதம் ராஜசேகர், மனைவி ஜீவிதா, 2 மகள்கள் என அனைவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து 4 பேரும் ஐதராபாத்தில் உள்ள சிட்டி நியூரோ சென்டரில் சிகிச்சை பெற்று வந்தனர். தற்போது மகள்களும், ஜீவிதாவும் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், நடிகர் ராஜசேகர் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார்.

சமீபத்தில் கூட ராஜசேகரின் உடல் நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. ஐசியூ-வில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அங்கு அவருக்கு பிளாஸ்மா தெரபி மற்றும் CYTOSORB தெரபி அளிக்கபட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ராஜசேகரின் உடல் நிலை நல்லபடியாக இருப்பதாகவும், மருத்துவர்கள் குழு அவரை கண்காணித்து வருவதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.

இதனிடையே ராஜசேகர் உடல் நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன. இதனால் வேதனைக்கு ஆளான மனைவி ஜீவிதா தனது கணவரின் உடல் நிலை குறித்து விளக்கமளித்துள்ளார்.

விளக்கமளித்துள்ளார். அதில், முன்பு இருந்ததை விட ராஜசேகரின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும், ஆரம்பத்தில் இருந்தே அவர் வென்டிலேட்டரில் சிகிச்சை பெறுவதாக வெளியாகும் தகவல்கள் உண்மை இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் தயவு செய்து வதந்தி பரப்ப வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ள ஜீவிதா, கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து தனது கணவரை மீட்க போராடும் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.