காப்பான் படத்திற்கு பிறகு சூர்யா நடித்துள்ள படம் சூரரைப் போற்று. இறுதிச்சுற்று இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலானது. இந்தப்படத்தில் அபர்ணா பாலமுரளி, மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சூர்யாவின் 2டி நிறுவனமும், சிக்யா நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். 

படத்தின் டீசருக்காக காத்திருக்கும் சூர்யா ரசிகர்களுக்காக ஸ்பெஷல் தீம் மியூசிக் ஒன்றை ஜி.வி.பிரகாஷ் தயாரித்தார். மாறா என பெயரிடப்பட்ட அந்த தீம் மியூசிக்கின் தமிழ் ரேப் பாடலை நடிகர் சூர்யா தனது சொந்த குரலில் பாடியிருப்பதாக, ஜி.வி.பிரகாஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்த தகவல் சூர்யா ரசிகர்களால் இந்திய அளவில் முதலிடம் பிடிக்கும் அளவிற்கு ட்ரெண்ட் செய்யப்பட்டது. 

இந்நிலையில் ஆக்‌ஷன் படங்களில் அசத்தும் சூர்யாவிற்கு தெலுங்கில் நல்ல மார்க்கெட் உள்ளது. சூர்யா நடிப்பில் வெளியான சிங்கம், 24 போன்ற படங்கள் கோடிகளில் வசூலை வாரிக்குவித்து சாதனை படைத்தது. எனவே தெலுங்கு ரசிகர்களை குஷிப்படுத்த முடிவு செய்த சூர்யா, மாறா ரேப் சாங்கின் தெலுங்கு வெர்சனை தனது சொந்தக் குரலில் பாடி அசத்தியுள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.