லெஜெண்ட் சரவணா ஸ்டோர் அருள் படத்தில் இணைந்த தேசிய விருது பிரபலம்..!

பிரபல தொழிலதிபராக அனைவராலும் அறியப்பட்ட, லெஜெண்ட் சரவணா ஸ்டோர் அருள், சின்னத்திரையில் அவருடைய கடையில் விளம்பரத்தில் தோன்றி பிரபலமானதை தொடர்ந்து தற்போது, திரைப்படங்களிலும் நடிக்க துவங்கியுள்ளார்.
 
lyricist pa vijay join the legend saravanan arul movie

பிரபல தொழிலதிபராக அனைவராலும் அறியப்பட்ட, லெஜெண்ட் சரவணா ஸ்டோர் அருள், சின்னத்திரையில் அவருடைய கடையில் விளம்பரத்தில் தோன்றி பிரபலமானதை தொடர்ந்து தற்போது, திரைப்படங்களிலும் நடிக்க துவங்கியுள்ளார்.

இந்த படத்தின் பூஜை கடந்த வருடம் போடப்பட்டு, படப்பிடிப்பு பணிகளும், பல்வேறு இடங்களில் பரபரப்பாக நடந்துகொண்டிருக்கிறது. சமீபத்தில் கூட, 10 கோடி செலவில் பிரமாண்டமாக உருவான ஒரு பாடலின், புகைப்படங்கள் வெளியாகி அனைவரையும் பிரமிக்க வைத்தது.

lyricist pa vijay join the legend saravanan arul movie

இரட்டை இயக்குனர்கள் ஜெடி - ஜெர்ரி இயக்கி வரும் இந்த படத்திற்கு, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். பிரபல மாடலும், நடிகையுமான கீதிக்கா திவாரி கதாநாயகியாக நடித்து வருகிறார்.

lyricist pa vijay join the legend saravanan arul movie

அடிக்கடி இந்த படத்தின் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், தற்போது இந்த படத்தின் பாடலாசிரியர் குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு ஹிட் பாடல்களை எழுதி, தேசிய விருது வென்ற பாலாசிரியர் பா.விஜய் இந்த படத்தின் பாடல்களை எழுத்தவுள்ளார்.

lyricist pa vijay join the legend saravanan arul movie

பா.விஜய் இப்படத்தின் இயக்குனர்கள் ஜெடி - ஜெர்ரி மற்றும் இசையமைப்பாளருடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios