தரமா ஒரு பாட்டு ரெடி.. செம வேகத்தில் பயணிக்கும் வெங்கட் பிரபு.. தளபதி 68 - சீக்ரெட்ஸ் சொன்ன மதன் கார்க்கி!
Lyricist Madhan Karky : தளபதி விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் உலக அளவில் 500 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் தளபதி விஜயின் அடுத்த திரைப்படம் குறித்த சில சுவாரசிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
முதல்முறையாக பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வருகின்றார். இந்த திரைப்படம் அவருடைய 68வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் துவங்கியுள்ள நிலையில், இந்த படத்தில் இடம்பெறும் ஒரு முக்கியமான பாடல் காட்சி படமாக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.
தளபதி விஜய் நடிப்பில் வெளியான நண்பன், துப்பாக்கி மற்றும் கத்தி ஆகிய தரமான திரைப்படங்களில், பாடல் ஆசிரியராக பணியாற்றிய மதன் கார்த்தி, தளபதி 68 திரைப்படத்திலும் பாடல்களை எழுதி உள்ளார். தற்பொழுது அவர் ஒரு தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், தான் எழுதிய ஒரு பாடல் குறித்து அவர் பேசியுள்ளார்.
அந்த பாடலுக்கான படபிடிப்புகள் முடிந்து விட்டதாகவும், யுவன் சங்கர் ராஜா தன்னிடம் அந்த பாடல் மிகவும் சிறப்பான முறையில் வந்துள்ளது என்று கூறியதாகவும் மதன் கார்க்கி தெரிவித்துள்ளார். இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது தளபதி 68 பட பணிகளுக்காக தாய்லாந்து சென்றுள்ள நிலையில், அவர் உச்சகட்ட வேகத்தில் தனது பணிகளை செய்து வருவதாகவும் மதன் கார்க்கி தெரிவித்துள்ளார்.
மேலும் தளபதி விஜய் அவர்களுடன் பல ஆண்டுகள் கழித்து இந்த திரைப்படத்தில் தான் இணையுள்ள நிலையில், அவருக்காக தான் எழுதிய பல பாடல்கள், தனக்கு மிகப் பெரிய புகழை பெற்று தந்தது என்று அவர் கூறியுள்ளார். தளபதி 68 திரைப்படத்தில் மூத்த தமிழ் திரை உலக நடிகர், நடிகளான பிரபுதேவா, பிரசாந்த், லைலா மற்றும் சினேகா உள்ளிட்ட பலர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D